World protein day | நம் உடலில் புரத சத்து எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா?

protein
protein
Published on

உலக புரத தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 27 அன்று கொண்டாடப்படுகிறது. நம் உணவில் புரதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டவே இந்த நாள். உலகில் உள்ள அனைவருக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும், புரதக் குறைபாட்டை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் இதைச் செய்தார்கள்.

புரதத்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், எவ்வளவு புரதம் சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதுதான் இந்த நாளின் முக்கிய நோக்கம். இதுமட்டுமல்லாமல், புரதக் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றியும் இந்த நாள் நமக்கு எடுத்துரைக்கிறது. புரதம் நிறைந்த உணவுகளை நம் அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொண்டால், உலகில் ஊட்டச்சத்து குறைபாட்டைப் பெருமளவுக்குக் குறைக்க முடியும் என்று இந்த நாள் மூலம் நமக்குப் புரிய வைக்கப்படுகிறது.

சரியான அளவு புரதம் சாப்பிட்டால், நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று உலக மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதி கவுன்சில் விரும்பியது. அதற்காகத்தான் உலக புரத தினம் கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மருவை எடுக்க கஷ்டப்படுறீங்களா? நெயில் பாலிஷ் இருந்தா போதும்.. ஈஸியா எடுத்திடலாம்!
protein

காலப்போக்கில், இந்த நாள் உலக அளவில் பிரபலமானது. இன்று பல அமைப்புகள், நிறுவனங்கள், மருத்துவ வல்லுநர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து புரதத்தின் நன்மைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்குப் புரதம் எவ்வளவு முக்கியம் என்று சொல்லித்தர, இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. போதுமான அளவு புரதம் நம் உடலுக்குக் கிடைத்தால், தசைகள் வலுவாக இருக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நம் உடலில் உள்ள ஹார்மோன்களும் சரியாக வேலை செய்யும். இதுதவிர, உலகில் பல நாடுகளில், பல மக்களுக்குப் புரதக் குறைபாடு உள்ளது. இந்தக் குறைபாட்டைப் போக்க எவ்வளவு புரதம் சாப்பிட வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இந்த நாள் ஏற்படுத்துகிறது.

புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டால், ஊட்டச்சத்து குறைபாடு, அதனால் வரும் நோய்கள், இதுபோன்ற பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க முடியும். புரத சத்து குறைவால் தான் பலருக்கும் வயிற்றில் தொப்பை ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடல் எடைக்கு 0.8 கிராம் புரதம் தேவைப்படுகிறது. இதுதான் பரிந்துரைக்கப்பட்ட அளவு.

உதாரணமாக, 50 வயது பெண் ஒருவர் 63 கிலோ எடை இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு ஒரு நாளைக்கு 53 கிராம் புரதம் தேவை. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிக புரதம் தேவைப்படும். குழந்தையின் வளர்ச்சிக்கு, நஞ்சுக்கொடி, மார்பகங்கள் மற்றும் இரத்த ஓட்டம் சீராக இருக்க ஒரு நாளைக்கு 75-100 கிராம் புரதம் தேவைப்படும்.

புரோட்டின் அதிகமான உணவை எடுத்து கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com