China started cross-border QR transactions!
China started cross-border QR transactions! 
பொருளாதாரம்

எல்லை தாண்டிய க்யூ ஆர் பரிவர்த்தனையை தொடங்கிய சீனா!

க.இப்ராகிம்

சீனா தாய்லாந்துடன் இணைந்து எல்லை தாண்டிய க்யூ ஆர் மொபைல் பேமென்ட் அப்ளிகேஷன் பரிவர்த்தனையை தொடங்கி இருக்கிறது.

தற்போது உலகின் மிகப்பெரிய பொருளாதார நடவடிக்கையாக மாறி இருப்பது யுபிஐ பரிவர்த்தனை. உள்நாட்டு வளர்ச்சியில் யுபிஐ பரிவர்த்தனைகள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருக்கின்றன. இதனால் நேரடி பணம் மாற்று பரிவர்த்தனை குறைந்து இருக்கிறது. இதை ஊக்குவிக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு யுபிஐ பரிவர்த்தனையில் புதிய புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் சீனாவின் ஹாங்காங் நாணய ஆணையமும், தாய்லாந்தில் மத்திய வங்கியும் கூட்டாக இணைந்து வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், இரு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், நுகர்வோர், மக்கள் ஆகியோர் சில்லறை பரிவர்த்தனையை க்யூ ஆர் கோட் பரிவர்த்தனை வழியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இரு நாட்டைச் சேர்ந்த மக்களும் எல்லை தாண்டிய தங்களுடைய பரிவர்த்தனை நடவடிக்கைகளை க்யூ ஆர் கோடை தங்களது மொபைல் பேமென்ட் அப்ளிகேஷன் வழியாக ஸ்கேன் செய்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடவடிக்கையில் ஈடுபட முடியும்.

தாய்லாந்து மற்றும் சீனா இடையே ஏற்பட்டு இருக்கக்கூடிய புதிய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி, எல்லை கடந்த வர்த்தகம், சுற்றுலா ஆகிய துறையில் மேம்பாட்டை கொண்டுவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் பேமென்ட் அப்ளிகேஷன் வழியாக க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும் நபர்கள் எந்த நாட்டு கரன்சியின் அடிப்படையில் பரிவர்த்தனை மேற்கொள்கிறார்கள் என்பதை அவர்களே தேர்வு செய்து கொள்ள முடியும்.

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

அவல் நிவேதனம் நடைபெறும் அனுமன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

Personal Finance: இந்திய சாமானியர்களுக்கான அத்தியாவசிய நிதிக் குறிப்புகள்! 

உறவுகளை மேம்படுத்த என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?

SCROLL FOR NEXT