Financial Mistakes 
பொருளாதாரம்

Financial Mistakes: சராசரி மனிதன் செய்யும் நிதித் தவறுகள்! 

கிரி கணபதி

ஒரு தனிநபர் அவரது தனிப்பட்ட நிதிகளை நிர்வகிப்பது சவாலானது. ஆனால் சில நிதித் தவறுகளை தவிர்ப்பது மூலமாக பாதுகாப்பான எதிர்காலத்தை அவர் உருவாக்க முடியும். பல நபர்கள் அவர்களது நிதி முன்னேற்றத்தை தடுக்கும் தேவையில்லாத விஷயங்களில் விழுகின்றனர். இதன் காரணமாகவே அவர்களால் வாழ்வில் முன்னேற முடிவதில்லை. இந்தப் பதிவில் ஒரு சராசரி நபர் தவிர்க்க வேண்டிய சில பொதுவான நிதித் தவறுகள் பற்றி பார்க்கலாம். 

பட்ஜெட்டை புறக்கணிப்பது: வாழ்க்கையை நடத்துவதற்கு எந்தவித பட்ஜெட்டும் இல்லாமல் விருப்பம்போல செலவழிப்பதால் எளிதாக கடனில் விழுந்து விடுவீர்கள். உங்கள் வருமானம், செலவுகள் மற்றும் சேமிப்பு இலக்குகளை கணக்கிடும் ஒரு எதார்த்தமான பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகவும் முக்கியமானது. முடிந்தவரை ஒவ்வொரு மாதமும் எதற்காகவெல்லாம் நீங்கள் செலவு செய்யப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து, வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ளவும். இது உங்களது பணத்தை பெரிதளவில் பாதுகாக்கும். 

வரவுக்கு மீறிய செலவு: உங்கள் வருமானம் அதிகரிக்கும்போது நீங்கள் உங்கள் வாழ்க்கைமுறையை மாற்ற விரும்புகிறீர்கள். இருப்பினும் நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்வதால் கடன் மற்றும் நிதி நெருக்கடியில் மாட்டிக் கொள்ளலாம். எனவே ஆசைகளை விட தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, தேவையில்லாத விஷயங்களை வாங்குவதை தவிர்ப்பதன் மூலம், வாழ்க்கையை சரியாக வாழ முடியும். 

அவசர கால சேமிப்பு இல்லாமை:  மருத்துவ செலவுகள் அல்லது கார் பழுதுபார்ப்பு போன்ற எதிர்பாராத செலவுகளுக்கு நீங்கள் தயாராக இல்லை என்றால், அது உங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம். எனவே குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாத வாழ்க்கைச் செலவுகளை பார்த்துக் கொள்ளும் அளவிலான அவசர நிதியை சேமிக்கவும். இது உங்களுக்கு மன அமைதியை வழங்கி, எதிர்பாராத சூழ்நிலைகளில் கடனில் விழுவதிலிருந்து உங்களை பாதுகாக்கும். 

அதிக வட்டிக்கு கடன் வாங்குதல்: அதிக வட்டி விகிதங்களைக் கொண்ட கிரெடிட் கார்டுகள் மற்றும் கந்துவட்டி போன்றவற்றால், உங்களது கடனின் அளவு அதிகமாகிவிடும். எனவே முடிந்தவரை கிரெடிட் கார்டை தவிர்ப்பது நல்லது. அதேபோல இருக்கும் கடனை விரைவாக அடைப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். 

ரிட்டயர்மென்டை திட்டமிடாதது: உங்களது இறுதி காலத்திற்காக இன்றிலிருந்தே சேமிக்க ஆரம்பிக்கவும். இளம் வயதில் இருப்பவர்கள் தங்களுக்கு அதிக நேரம் இருப்பதாக நினைத்து ரிட்டயர்மென்ட் காலத்திற்கான முதலீட்டை தாமதப்படுத்துகிறார்கள். நீங்கள் எவ்வளவு சீக்கிரமாக இறுதி காலத்திற்காக முதலீடு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு கூட்டு வட்டியின் ஆற்றலை நீங்கள் அனுபவிக்க முடியும். மேலும் அரசாங்கத்தின் ஓய்வூதிய திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது உங்களது எதிர்காலத்தை பாதுகாக்க உதவும். 

இந்த பொதுவான நிதித் தவறுகளை தவிர்ப்பதன் மூலம் உங்களது பணத்தை கட்டுப்படுத்தி நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை நீங்கள் அமைத்துக் கொள்ளலாம். பணம் சார்ந்த விஷயங்களில் ஒழுக்கத்துடனும் மற்றும் விவேகமாகவும் முடிவெடுப்பது, நீங்கள் நிதி நல்வாழ்வை அடைவதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT