credit card... 
பொருளாதாரம்

கிரடிட்கார்டு அட்டைகளா… தூக்கம் தொலைக்கும் அட்டைகளா?

கல்கி டெஸ்க்

-பி.ஆர்.லக்ஷ்மி

டன் அட்டை பயன்படுத்தும் முறையினால் நமது மாத வருமானத்தைச் சேமிக்க முடியுமா என்பதுதான் இன்று மக்களின் வினாவாக உள்ளது. ஒவ்வொருவருடைய கைபேசிக்கும் நாள் தவறாமல் வரும் அழைப்பு வரும். நாங்கள் கிரெடிட் கார்டு தருகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள் என வெவ்வேறு வங்கிகளில் இருந்து அழைப்பு வரும்.

கடன் அட்டை என்றால் என்ன? அதன் பயன் என்ன?

ஒரு மனிதனின் மாத வருமான அடிப்படையில் வங்கி வழங்கும் கடன் உதவிதான் கடன் அட்டை. குடும்பத்தில் இருக்கும் பெண்களும், ஆண்களும் கிரெடிட் கார்டை ஜாக்கிரதையாக பயன்படுத்தினால் நாம் வெளியில் எங்கும் லோன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்தக் கடன் அட்டை மூலம் செலவு செய்யும்போது நமக்கு 45 நாள் முதல் 50 நாள் வரை கடன் வசதி வட்டி இல்லாமல் கிடைக்கும். ஆனால், இது வியாபாரம் செய்பவர்களுக்கு அதிகமாக வங்கி தருவது கிடையாது. நமக்கு 50 நாள் வரை கடன் உதவியை குறிப்பிட்ட வங்கி தரும்பொழுது அதற்காக சில சலுகைகளையும் நமக்கு வழங்குகிறது.

வங்கி நமக்கு வழங்கிய கடன் அட்டையைப் பயன்படுத்தி மாதா மாதம் நாம் செய்யும் செலவினங்களுக்கான தொகையை குறிப்பிட்ட தேதியில் வங்கி நமக்கு அனுப்பும். அந்தத் தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் அந்தப் பில் தொகையை மொத்தமாகச் செலுத்திவிட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நாம் கூடுதலாக எந்தப் பணமும் செலுத்த வேண்டியது இல்லை.

நம்மால் ஒவ்வொரு மாதமும் அந்தத் தேதியில் எவ்வளவு பணம் செலுத்த இயலுமோ அந்தத் தொகைக்கு மட்டும் கடன் அட்டையைப் பயன்படுத்த நமக்கு நாமே கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டால் கவலையின்றி இருக்கலாம்.

ஆனால், கடன் அட்டையில் பணம் கடனுக்கு வாங்கும்போது அதிகப்படியான வட்டியை செலுத்த வேண்டி இருக்கும். ஆதலால் நாம் வரவறிந்து செலவு செய்து கூடுமானவரை கடன் அட்டையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து கையில் பணம் கொடுத்து வாங்குவதையே பழக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பொருள் நாம் ஆன்லைனில் அல்லது கடையில் வாங்கும்பொழுது மாதத்திற்கு தகுந்தமாதிரி பிடித்து வாங்கி முடித்துக்கொள்ளும். மீதி தொகையை நாம் செலுத்தி வருவோம். அதற்குரிய பில் எல்லாவற்றையும் அந்த வங்கி கவனித்துக்கொள்ளும்.

ஒரு மாதம் நாம் செலுத்தவில்லை என்றாலும் அந்தத் தொகையும் சேர்த்து வட்டி கணக்கிட்டு அடுத்த மாதம் முதல் பில் வர ஆரம்பிக்கும் இதனால் அதற்கு அபராதத் தொகை வட்டிக்கு வட்டி என போடுவதுடன் ஜிஎஸ்டியையும் நம்மிடம்தான் வசூல் செய்யும். இதனை உணர்ந்து நாம் வங்கி அட்டையைப் பயன்படுத்துவோம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT