உலகின் மிக முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் இந்தியாவில் போன் உற்பத்தியைத் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூகுள் நிறுவன தலைவர் ரிக் ஆஸ்டர்லோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கூகுள் நிறுவனத்தினுடைய உற்பத்தியை தொடங்குவதற்காக நடந்த ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சியில் ரிக் ஆஸ்டர்லோ தெரிவித்தது, கூகுள் நிறுவனம் தன்னுடைய தொடர் செயல்பாடுகளை விரிவு படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் உற்பத்தி தளங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் உருவெடுத்து இருக்கிறது.
மேலும் கூகுள் பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக கால் பதித்து வருவதால், கூகுள் நிறுவனம் உலகின் மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்து இருக்கிறது.
கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள உற்பத்தி ஆலைகள் மூலமாக 9 மில்லியன் செல்போன்களை உற்பத்தி செய்து இருக்கிறது. கூகுள் பிக்சல் ஃபோன்களுடைய தேவை அதிகரித்திருப்பதாலும், பயனாளிகளினுடைய எண்ணிக்கை உயர்ந்திருப்பதாலும் இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை தொடங்க முடிவு செய்து இருக்கின்றோம்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் கூகுள் பிக்சல் 8 மாடல்களை உற்பத்தி செய்ய முடிவு செய்து இருக்கின்றோம். உலகின் மிகப்பெரிய உற்பத்தி ஆலைகளில் ஒன்றாக இதை உருவாக்க உள்ளோம். மேலும் இங்கு போன்கள் மட்டுமல்லாது ஹார்டுவேர்களையும் இந்தியாவில் கூகுள் நிறுவனம் உற்பத்தி செய்ய முடிவு செய்திருக்கிறது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய உற்பத்தி ஆலையாக இந்தியாவை மாற்றி இருந்த நிலையில் கூகுள் நிறுவனமும் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருப்பது இந்தியாவின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், பொருளாதாரத்திலும் முன்னேற்றத்தை உண்டாக்கும்.