How important is CIBIL score? 
பொருளாதாரம்

கடன் பெற சிபில் ஸ்கோர் எவ்வளவு முக்கியம்?

க.இப்ராகிம்

யார் கடன் பெற தகுதி உடையவர் என்பதை சிபில் ஸ்கோரை வைத்து நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. இதனால் சிபில் ஸ்கோர் முக்கியத்துவம் பெறுகிறது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. அதே நேரம் கடன் வழங்கு வாங்குபவரின் உறுதித் தன்மையை உறுதி செய்ய கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுடைய சிபில் ஸ்கோரை ஆய்வு செய்வர். ஏனென்றால் சிபில் ஸ்கோர் என்பது சம்பந்தப்பட்ட நபர்களுடைய நிதி மேலாண்மை, பொறுப்புணர்வு, கடன் வரலாறு, மற்றும் கணக்கு முழு விவரம் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து வெளியிடப்படுகிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்டவருடைய நம்பகத்தன்மை குறித்து நிறுவனம் அறிந்து கொள்ள முடிகிறது.

சிபில் ஸ்கோர் மூலமாக கடன் பெறுபவர் பொறுப்புணர்வுடன் திருப்பித் தருபவரா, தாமதப்படுத்துபவரா, ஒழுங்கற்றவரா, ஆபத்தானவரா என்பதை கடன் வழங்கும் நிறுவனங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவுகிறது.

சிபில் ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க நம்பர்களைக் கொண்ட பகுப்பாய்வு ஆகும். 600 க்கு கீழ் சிபில் ஸ்கோர் இருந்தால் அவர் கடன் பெற ஏற்றவர் அல்ல என்பதை நிறுவனங்கள் முடிவு செய்யும். மேலும் சம்பந்தப்பட்ட நபர் ஆபத்து உரியவர் என்று முடிவு செய்யப்படும். சிபில் ஸ்கோர் 600 முதல் 699 வரை இருந்தால் அவர் கடனை தாமதமாக செலுத்துபவர், ஒழுங்கற்றவர் என்று கருதப்படும். 700 முதல் 799 வரை இருந்தால் பொறுப்புணர்வுடன் உரிய முறையில் கட்டுபவர் என்று கருதப்படும்.

800க்கு மேல் இருந்தால் கடன் வழங்க ஏற்றவர், அதிக நம்பிக்கைக்குரியவர் என்று கருதப்படும். இவ்வாறு சிபில் ஸ்கோர் உள்ளவருக்கு உடனடியாக கடன் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக வங்கிகள் கடன் வழங்குபொழுது சிபில் ஸ்கோர் 720 க்கு மேல் இருந்தால் கடன் வழங்க முன் வருகின்றனர்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT