India's decline in food exports.
India's decline in food exports. 
பொருளாதாரம்

உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா சரிவு!

க.இப்ராகிம்

உணவு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா சரிவை கண்டிருந்தாலும் மாற்று நடவடிக்கை மூலம் உலகின் பிற நாட்டு மக்களின் நலனை பாதுகாத்து இருக்கிறது இந்தியா.

உலகின் மிக முக்கிய உணவுக் களஞ்சியங்களில் ஒன்றாக விளங்குவது இந்தியா. உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து பல்வேறு வகையான உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதற்கு காரணம் இந்தியாவினுடைய தட்பவெட்ப சூழல், பல்வேறு வகையான நில வடிவமைப்புகளை கொண்ட இந்தியா பல்வேறு வகையான உணவு தானியங்கள் விளைவிக்க ஏற்ற இடமாக இருப்பதால் உலகின் பல்வேறு நாட்டு மக்களால் பிரதான உணவுகளாக பயன்படுத்தப்படும் பல உணவுப் பொருட்கள் இந்தியாவில் எளிதில் விளைவிக்க முடிகிறது.

இதனால் இந்தியாவில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் உலகில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா மிக முக்கிய பொருளாதார நாடாக விளங்குகிறது. ஆனால் நடப்பு ஆண்டில் காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, விவசாயத் துறை மிகப் பெரிய பின்னடைவு சந்தித்திருக்கிறது. உணவு உற்பத்தி இந்தியாவில் சரிவை கண்டிருக்கிறது.

உள்நாட்டில் உணவுப் பொருட்களில் விலை ஏற்ற காணப்பட்டது. இவற்றை கட்டுப்படுத்த இந்திய அரசு உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற பொருட்கள் ஏற்றுமதி தடைபட்டது. இதன் காரணமாக இந்தியா ஏற்றுமதி துறையில் 41,500 கோடி ரூபாய் சர்வை கண்டிருப்பதாக வர்த்தகத் துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உணவு பொருட்கள் ஏற்றுமதி துறையில் இந்தியாவின் வருவாய் குறைவாக இருந்தாலும் உள்நாட்டு தேவைக்கு முன்னுரிமை அளிப்பது அளிப்பது கடமையாகும். அதே சமயம் உணவு தட்டுப்பாடல் உலக மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்தியா உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் கடந்த ஆண்டு போல நட்பாண்டிலும் 4.40 லட்சம் கோடி ரூபாய் இலக்கை எட்ட முயற்சி செய்தது. இதற்காக வாழைப்பழம் மற்றும் பல்வேறு வகையான மதிப்பு கூட்டு பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தது.

இவை சற்று சீரான பொருளாதார நடவடிக்கைக்கு வழி வகுத்திருக்கிறது. மேலும் உலகில் உணவு தட்டுப்பட ஏற்படாமல் இருக்க இந்த மாற்று நடவடிக்கை வழி வகுத்திருக்கிறது என்று தெரிவித்தார்.

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

சிறப்பான நாள் அமைவதற்கு காலையில் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

“கடன அடைக்கதா இந்த படம்” – ‘இங்கு நான் தான் கிங்கு’ படம் பற்றி சந்தானம்!

‘லுக்கிசம்’ - கொரியன் வெப்டூன் குழந்தைகளுக்குச் சொல்லும் மெசேஜ் என்ன?

SCROLL FOR NEXT