Leaky Bucket Theory 
பொருளாதாரம்

உங்கள் வாழ்க்கையை மாற்றும் "கசிவுத் தொட்டி கோட்பாடு"! 

கிரி கணபதி

"கசிவுத் தொட்டி" என்ற சொல்லை கேட்டவுடன் நம் மனதில், ஒரு சிறிய தொட்டியில் தண்ணீர் கசிந்து கொண்டிருக்கும் காட்சி தோன்றும். ஆனால் இது, பொருளாதாரம், வணிக உலகில், இந்த வார்த்தை மிகவும் ஆழமான அர்த்தத்தை கொண்டுள்ளது. கசிவு தொட்டி கோட்பாடு (Leaky Bucket Theory), தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது நாடுகள் எவ்வாறு தங்கள் வருமானத்தை நிர்வகிக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு பொதுவான பார்வையை வழங்குகிறது. இந்தப் பதிவில், கசிவுத் தொட்டி கோட்பாடு என்றால் என்ன என்பது பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.‌ 

Leaky Bucket Theory: கசிவு தொட்டி கோட்பாட்டின் மையக் கருத்து என்னவென்றால், ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வருமானம் ஒரு தொட்டியில் உள்ள தண்ணீருக்கு ஒப்பானது. நாம் தொட்டியில் தண்ணீரை நிரப்புகிறோம் (வருமானம் ஈட்டுகிறோம்) அதே சமயம், தொட்டியில் உள்ள சில தண்ணீர் கசிந்து கொண்டிருக்கும் (செலவுகள்). தொட்டியில் நாம் நிரப்பும் தண்ணீர் அளவு தொட்டியில் இருந்து கசிந்து செல்லும் தண்ணீரை விட அதிகமாக இருந்தால், தொட்டி நிரம்பிக்கொண்டே போகும். ஆனால், கசிவு அதிகமாக இருந்தால், தொட்டி காலியாகிவிடும்.

இப்படிதான், வறுமையில் இருக்கும் குடும்பங்கள் ஒரு கசிவுத் தொட்டி போன்றவை. அவர்கள் எவ்வளவு வருமானத்தைப் பெற்றாலும், அந்த வருமானம் அனைத்து அவசியமான செலவுகளை ஈடு செய்வதற்கு முன்பே பல்வேறு காரணங்களால் கசிந்து விடுகிறது. இதன் விளைவாக, அவர்கள் வறுமைச் சுழற்சியில் சிக்கித் தவிக்கின்றனர். 

கசிவுத் தொட்டி கோட்பாட்டின் பயன்பாடுகள்:

கசிவுத் தொட்டி கோட்பாடு பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

  • தனிநபர் நிதி: தனிநபர்கள் தங்கள் நிதி நிலையை மேம்படுத்த கசிவு தொட்டி கோட்பாட்டைப் பயன்படுத்தலாம். தங்கள் வருமானத்தை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் இந்த கோட்பாட்டைப் பயன்படுத்தி தங்கள் நிதி இலக்குகளை அடையலாம்.

  • நிறுவன நிதி: நிறுவனங்கள் தங்கள் நிதி நிலையை பகுப்பாய்வு செய்யவும், லாபத்தை அதிகரிக்கவும் இந்த கோட்பாட்டைப் பயன்படுத்தலாம். வருவாயை அதிகரிக்கவும், செலவுகளை குறைக்கவும் புதிய வழிகளை கண்டுபிடிக்க இந்த கோட்பாடு உதவும்.

  • அரசு நிதி: அரசுகள் தங்கள் பொது நிதி நிலையை மேம்படுத்த கசிவு தொட்டி கோட்பாட்டைப் பயன்படுத்தலாம். அரசு செலவினங்களை கட்டுப்படுத்தவும், வருவாயை அதிகரிக்கவும் புதிய வழிகளை கண்டுபிடிக்க இந்த கோட்பாடு உதவும்.

இந்தக் கோட்பாடு மிகவும் எளிமையானதாக இருந்தாலும், இதன் மீது பல விமர்சனங்கள் உள்ளன. சிலர் இந்த கோட்பாடு மிகவும் எளிமையாக உள்ளது, உண்மையான உலகில் நிதி நிலை மிகவும் சிக்கலானது. பல காரணிகள் ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் நிதி நிலையை பாதிக்கின்றன. கசிவுத் தொட்டி கோட்பாடு இந்த காரணிகளை முழுமையாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறுகின்றனர்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT