No Cost EMI 
பொருளாதாரம்

No Cost EMI-யில் நாம் கவனிக்க வேண்டியவை!

ரா.வ.பாலகிருஷ்ணன்

நோ காஸ்ட் இஎம்ஐ எனும் மாதத் தவணையில் டிவி, ஃபிரிட்ஜ், மொபைல் மற்றும் சில விலை உயர்ந்த பொருள்களை வாங்கும் நபரா நீங்கள்! அப்படி என்றால் இந்தப் பதிவு உங்களுக்குத் தான்.

தொழில் வளர்ச்சி பெருகியுள்ள இன்றைய நிலையில், சந்தைகளும் விரிவடையத் தொடங்கி விட்டன. ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், நேராக கடைக்குச் சென்று வாங்கிய நாம் தான், இன்று இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குகிறோம். சந்தையை நம் கைகளுக்கே கொண்டு வந்த பெருமை தொழில்நுட்பத்தையேச் சாரும் என்றால் அது மிகையாகாது. ஒரு பொருளை வாங்கத் தேவையான பணத்தை வைத்திருப்பவர்களுக்கு பெரிதாக எந்த கஷ்டமும் இருக்காது. ஆனால், ஒரு பொருள் நமக்குத் தேவையாக இருந்தும், அப்பொருளை வாங்க பணம் இல்லாமல் கவலைப்படும் வாடிக்கையாளர்களை கவர கொண்டுவரப்பட்டது தான் இஎம்ஐ எனப்படும் மாதத் தவணைத் திட்டம்.

நம்மால் மொத்தமாக பணம் கொடுத்து வாங்க முடியாத சூழலில் மாதத் தவணைத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது இந்த வசதி அனைத்து விதமான சந்தைகள் மற்றும் வியாபார நிறுவனங்களிடமும் இருக்கிறது.

இதில் என்ன ஒரு பிரச்சினை என்றால், மாதாமாதம் ஒரு சிறு தொகையை கட்டுவதன் மூலம் இத்திட்டத்தில் அதற்கான வட்டியையும் நாம் செலுத்த வேண்டியிருக்கிறது. பலரும் இஎம்ஐ வசதியைப் பயன்படுத்தினாலும், வட்டியில்லாத இஎம்ஐ இருந்தால் நன்றாக இருக்குமே என ஆசைப்பட்டது உண்டு. இவர்களின் ஆசையை நிறைவேற்றவும், மேலும் பல வாடிக்கையாளர்களைக் கவரவும் வட்டியின்றி ஒரு பொருளின் அசல் விலையை மட்டுமே மாதத் தவணையாக செலுத்தும் நோ காஸ்ட் இஎம்ஐ வசதி கொண்டுவரப்பட்டது.

நோ காஸ்ட் இஎம்ஐ வசதி வந்த பிறகு பலரும் இத்திட்டத்தின் கீழ் நாம் வட்டி கட்டத் தேவையில்லை என்று பெருமூச்சு விடுகின்றனர். ஆனால், இத்திட்டத்தில் நீங்கள் ஒரு பொருளை வாங்க நினைத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், நோ காஸ்ட் இஎம்ஐ வசதியில் கடன் தரும் சில வணிக நிறுவனங்கள் வேறு விதமாக நம்மிடம் கூடுதல் பணத்தை வசூலிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

முதலில் நீங்கள் ஒரு பொருளை மாதத்தவணையில் வாங்கும் போது அதில் இருக்கும் விதிமுறைகளை நன்றாகப் படித்துப் பார்க்க வேண்டும். அப்பொருளை வாங்குவதற்கான அனைத்து விதமான நிதி செலுத்தும் வழிகளையும் அறிய வேண்டும்‌. பிராசஸிங் கட்டணம், நிர்வாக கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்டத் தொகையை கட்டச் சொல்வார்கள். இந்தக் கட்டணம் பொருளின் அசல் விலையில் குறைக்கப்படமாட்டாது. ஆகையால் இதுபோன்ற தேவையற்ற கட்டணங்கள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால், நீங்கள் கவனமாக இருப்பது அவசியமாகும்.

முதல் தவணையில் நாம் செலுத்தும் முன்பணம் மிகவும் முக்கியமானது. முன்பணத்தில் வேறு ஏதேனும் பெயரில் மறைமுக கட்டணங்களின் மூலம் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். நோ காஸ்ட் இஎம்ஐ வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களின் கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் மாதத்தவணையை தாமதிக்காமல் செலுத்தினால், கிரெடிட் ஸ்கோர் குறையாமல் நிர்வகிக்க முடியும்.

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

SCROLL FOR NEXT