பணம் சம்பாதிப்பது அவ்வளவு எளிதல்ல. எனவே நம்முடைய சம்பாத்தியத்தை புத்திசாலித்தனமாக செலவிடுவது மிகவும் முக்கியம். சரியான நீதித் திட்டமிடல் மற்றும் பொறுப்புடன் செலவு செய்வதன் மூலம் நம்முடைய நிதி இலக்குகளை அடைந்து, எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்கலாம். இந்தப் பதிவில் பணத்தை செலவழிப்பதற்கான சில ஸ்மார்ட் வழிகளைப் பற்றி பார்ப்போம்.
பணத்தை செலவழிப்பதற்கான ஸ்மார்ட் வழிகள்:
ஒரு பட்ஜெட்டை உருவாக்கவும்: பட்ஜெட் என்பது உங்கள் வருமானம் மற்றும் செலவுகளை கண்காணிக்க உதவும் ஒரு திட்டமாகும். உங்களுக்கான பட்ஜெட்டை உருவாக்க உங்கள் வருமானம் எவ்வளவு? எவ்வளவு செலவு செய்கிறீர்கள்? என்பதை முதலில் கணக்கிட வேண்டும். குறிப்பாக உங்களது தேவைகள் மற்றும் ஆசைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து பட்ஜெட்டை போட கற்றுக் கொள்ளுங்கள். தேவையான செலவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, ஆசைப்படும் விஷயங்களுக்கான செலவைக் குறைக்கவும்.
சேமிப்புத் திட்டத்தை உருவாக்கவும்: நாம் ஒவ்வொருவரும் எதிர்காலத்திற்காக சேமிப்பது மிகவும் முக்கியம். ஓய்வூதியம் அவசரகால நிதி கல்வி போன்ற நீண்ட கால இலக்குகளுக்காக சேமிக்கவும். இதுபோன்ற சேமிப்புகளை ஆட்டோமேஷன் செய்து, ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட தொகை சேமிப்புக் கணக்கில் தானாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
கடன் வாங்குவதைக் குறைக்கவும்: கடன் வாங்குவது எளிதானது. ஆனால், அதை திருப்பி செலுத்துவது கடினம். அவசியம் இல்லாமல் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். ஒருவேளை கடன் வாங்க வேண்டி இருந்தால் குறைந்த வட்டி விகிதம் மற்றும் உங்களுக்கு ஏற்ற மாதிரியாக பணத்தை திருப்பிச் செலுத்தும் விருப்பங்களைக் கொண்ட கடன்களைத் தேர்ந்தெடுக்கவும்.
புத்திசாலித்தனமாக பொருட்களை வாங்கவும்: நீங்கள் ஏதேனும் பொருட்கள் வாங்கப் போகிறீர்கள் என்றால் அவற்றின் விலைகளை ஒப்பிட்டு, சலுகை காலத்திற்காக காத்திருக்கவும். உடனடியாக தேவைப்படும் பொருட்களை மட்டுமே வாங்கவும். தேவையற்ற பொருட்கள் மீது பணத்தை வீணடிக்காதீர்கள்.
பணத்தை முதலீடு செய்யுங்கள்: உங்கள் பணத்தை வங்கிக் கணக்கில் சேமிப்பதற்கு பதிலாக அதை முதலீடு செய்ய முயற்சிக்கலாம். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற பல்வேறு முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு சரியான முதலீட்டு விருப்பங்களை ஆராய்ந்து முதலீடு செய்யவும்.
மேலும் நிதி சார்ந்த எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்ளுங்கள். தற்போது யூடியூபிலேயே பல்வேறு விதமான காணொளிகள் கிடைக்கின்றன. அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நிதி ஆலோசகரை அணுகி, நிதித் திட்டமிடல், முதலீடு, ஓய்வூதியத் திட்டமிடல் போன்ற விஷயங்களில் வழிகாட்டுதலைப் பெறுங்கள்.
பணத்தை செலவழிப்பதற்கு இந்த ஸ்மார்ட் வழிகளைப் பின்பற்றினால், உங்களது பணம் உங்களை விட்டு போகாமல், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து உங்களுக்கு எதிர்காலத்தில் பெரிதளவில் உதவும்.