குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடமான, சர்வதேச வைர சந்தையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
குஜராத் மாநிலம் சூரத் மாநகர் காஜோட் கிராமத்தில் 67 லட்சம் சதுர அடி பரப்பளவில் 354 ஏக்கரில், 300 சதுர அடி முதல் 1 லட்சம் பரப்பளவு கொண்ட அலுவலகங்கள், மேலும் 15 மாடிகள், 9 கோபுரங்கள் கொண்ட சர்வதேச வைர சந்தையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதில் 4500 அலுவலகங்கள் உள்ளன. மேலும் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் இடங்கள், சுங்கவரி அலுவலகம், சர்வதேச வங்கிகள், பாதுகாப்பு பெட்டகம் ஆகியவை அமைந்துள்ளன.
மேலும் என்டிஏ நிர்வாகம் இதை ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்கிறது. இந்த சர்வதேச வர்த்தக மையம் உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடமாக விளங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனை மிஞ்சும் மாபெரும் கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைய உள்ளது.
இந்த கட்டிடத்தில் பட்டை தீட்டப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்படாத வைரங்கள் மற்றும் அனைத்து வகையான நகை வர்த்தகங்களும் நடைபெற உள்ளது. இதை திறந்து வைத்து பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய இந்தியாவின் வலிமைக்கு எடுத்துக்காட்டாக இந்த புதிய கட்டிடம் தீர்மானமாக செயல்படும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மேலும் பொருளாதார வளர்ச்சியில் 25 ஆண்டுகளில் அதி தீவிர முன்னேற்றத்தை மேற்கொள்ள இலக்குகள் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 5 டிரில்லியன் முதல் 10 டிரில்லியன் டாலர்கள் வரை இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே இலக்கு என்று கூறினார்.