UPI CIRCLE 
பொருளாதாரம்

UPI Circle- ஒரே அக்கவுண்ட்; பலபேர் பணபரிவர்த்தனை.. அதெப்படி?

மணிமேகலை பெரியசாமி

பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்போதோ, கடைகளில் பொருட்கள் வாங்கும்போதோ, "அண்ணா சில்லறையா இருக்கு" என்று சொன்ன காலம் மாறி, "சில்லறை இல்லை" என்று சொல்லும் நிலையில் இன்று இருக்கிறோம். 10 ரூபாய் முதல் பல லட்சம் வரை என அனைத்து பணபரிவர்த்தனையும் டிஜிட்டலில் நடைபெறுவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

அதிலும் குறிப்பாக, 2016 ஆம் ஆண்டு இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (National Payment Corporation of India) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட UPI தற்போது மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கட்டண முறையாக மாறியுள்ளது.

பயனர்களின் பாதுகாப்பு, எளிய அணுகுமுறை போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் புது புது வசதிகளையும், கட்டுப்பாடுகளையும் UPI தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி, UPI பயனர்களின் பாதுகாப்பு மற்றும் பயனர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அம்சங்களை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிமுகப்படுத்தியது. அந்த அம்சங்களில் ஒன்றுதான் UPI Circle.

UPI Circle அம்சத்தில் ஒருவரின் வங்கி கணக்கைப் பயன்படுத்தி, வேறொருவர் UPI மூலம் டிஜிட்டல் பேமெண்ட் செய்ய முடியும். அதாவது, ஒரு யுபிஐ அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது நம்பகமான நபர்கள் டிஜிட்டல் பணவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

இதில் வங்கி கணக்கை உடையவர் முதன்மை பயனராக இருப்பார். இந்த முதன்மை பயனர் தங்கள் குடும்ப உறுப்பினர்களையோ அல்லது வீட்டு வேலைகளையோ இரண்டாம் நிலைப் பயனராக தேர்வு செய்து கொள்ளலாம். இந்த இரண்டாம் நிலைப் பயனர்கள் முதன்மை பயனர் இல்லாமலேயே அவரின் அனுமதியோடு டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்யப்படும் பணபரிவர்த்தனைகளுக்கு முதன்மைப் பயனர் குறிப்பிட்ட வரம்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது.

UPI Circle அம்சத்தில், முதன்மைப் பயனர், இரண்டாம் நிலைப் பயனர்களை வரம்புகளுடன் கூடிய இரண்டு முறைகளில் இணைத்துக் கொள்ள முடியும்.

ஒன்று, இரண்டாம் நிலைப் பயனர்கள் ஒவ்வொரு பணபரிவர்த்தனைகளுக்கும் முதன்மைப் பயனரின் அனுமதி பெரும் வகையிலும், இரண்டாவது முறையில், முதன்மை பயனர், இரண்டாம் நிலைப் பயனர் குறிப்பிட்ட அளவிலான பணப்பரிவர்த்தனைகளை மட்டும் அணுகும் வகையிலும் நிர்ணயம் செய்யலாம்.

UPI Circle அம்சம், UPI பயனர்கள் டிஜிட்டல் அல்லது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மோசடியில் சிக்கிக் கொள்ளாமல் தடுக்க வழிவகை செய்கிறது. ஒரு முதன்மை குடும்பத்தில் வங்கி கணக்கு இல்லாதவர்கள், UPI அக்கவுண்டைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சமாக உள்ளது.

இரண்டாம் நிலைப் பயனர்கள் குறைந்தபட்ச தலையீடு மற்றும் போதுமான இடர் குறைபாடுகளுடன் பணம் செலுத்துபவரின் கணக்கிலிருந்து பரிவர்த்தனைகளைச் செய்ய UPI Circle உதவுகிறது.

என்னதான், UPI Circle பயன்படுத்துவதில் ரிஸ்க் போதிய அளவு இல்லையென்றாலும், முதன்மை மற்றும் இரண்டாம் நிலைப் பயனர்களுக்கு பண மோசடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றிய போதுமான கல்வி மற்றும் விழிப்புணர்வு இருப்பது அவசியமானது.

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT