What is Investment Banking? 
பொருளாதாரம்

இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் என்றால் என்ன? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

கிரி கணபதி

இன்றைய சிக்கலான மற்றும் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்ட உலக பொருளாதாரத்தில் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் என்ற முறை நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமானது. இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் என்பது நிதித்துறையில் ஒரு சிறப்புமிக்க ஒன்றாகும். குறிப்பாக, பெரு நிறுவனங்கள், அரசாங்கங்கள் மற்றும் அதிக சொத்து மதிப்புள்ள தனி நபர்களுக்கு பல நிதி சேவைகளை வழங்குவதில் இது கவனம் செலுத்துகிறது. 

இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் என்றால் என்ன?

இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் என்பது ஒரு நிறுவனத்திற்கான மூலதனத்தை உருவாக்குதல், நிதி ஆலோசனை மற்றும் கடினமான பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் ஒரு முறையாகும். இதில் வங்கிகள், மூலதனத்தைத் தேடும் நிறுவனங்களுக்கும், முதலீட்டு வாய்ப்புகளைத் தேடும் முதலீட்டாளர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக செயல்படுகின்றன.

இந்த சேவையை வழங்கும் வங்கியானது, ஒரு நிறுவனத்திற்கென பங்கு வெளியிடும் தரகு நிறுவனங்களை நியமித்து வெற்றிகரமாக பங்குச்சந்தையில் அவற்றை பட்டியலிடச் செய்வார்கள். ஒரு நிறுவனம் தானாக பங்குச் சந்தையில் பட்டியலிட்டு முதலீட்டை திரட்டுவதென்பது பல விதிகளுக்கு உட்பட்டது. இதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதால், இதில் பிரச்சனை எதுவும் வரக்கூடாது என்பதற்காக வங்கிகளே இந்த சேவையை அளிக்கிறது. 

இதுமட்டுமின்றி, பிற நிறுவனங்களை வாங்க முயலும் நிறுவனங்களுக்கும் இன்வெஸ்ட்மென்ட் வங்கிகள் உறுதுணையாக உள்ளது. இந்த வங்கிகள், வாங்கவுள்ள நிறுவனங்களைப் பற்றி தீவிர ஆய்வு செய்து, அதன் துல்லியமான மதிப்பை அறிய உதவுகிறது. இவற்றிற்கென தனியாக நிறுவனங்களை இணைத்தல் மற்றும் வாங்குதலின்போது குறிப்பிட்ட நெறிமுறைகளைப் பின்பற்றும் வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. முதலீட்டு வங்கிகளுக்கு இதில் ஆழ்ந்த அனுபவம் இருப்பதால், நிறுவனங்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளை திறமையாகக் கையாளும். 

இந்தியாவில் முதலீட்டு வங்கிகள் அரசாங்கத்திற்கு துணையாக இருந்து, பல அரசு நிறுவனங்களுக்கு பங்குகள் வெளியிடுவது, அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பது போன்றவற்றில் ஈடுபடுகிறது. எனவே இந்த வங்கிகள் மிகக் கடினமாக உள்ள வர்த்தகப் பரிவர்த்தனைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

முதலீட்டு வங்கிகள் நிறுவனங்கள் சார்ந்த துறை என்பதால் பொதுமக்களுக்கு இதைப் பற்றி தெரிவதில்லை. இருப்பினும் நீங்கள் ஓர் நிறுவனம் தொடங்கப் போகிறீர்கள் என்றால், அதை பங்குச்சந்தையில் பட்டியலிட முதலீட்டு வங்கிகள் பற்றிய புரிதல் உங்களுக்கு உதவலாம். 

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT