Indraja shankar marriage 
சின்னத்திரை / OTT

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ரோபோ ஷங்கர் மகள் திருமணம்... வைரலாகும் போட்டோஸ்!

விஜி

ரோபோ ஷங்கரின் மகளும் நடிகையுமான இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.

மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்று, அதன் பிறகு வெள்ளித்தறையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கி, பிறகு மிகப் பெரிய காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக உயர்ந்தவர் தான் ரோபோ சங்கர். தற்போது அஜித், விஜய் என பெரிய பெரிய நடிகர்களுடன் படம் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் அவருக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டு மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டார். தற்போது அவர் மீண்டு வந்த நிலையில், அவருடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

பிரபல நடிகையான இந்திரஜா சங்கருக்கு அவருடைய தாய்மாமாவான கார்த்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இவர்களின் திருமண கொண்டாட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில், தற்போது திருமண போட்டோஸும் வைரலாகி வருகிறது.

தாலி கட்டியதும் ஆனந்தக் கண்ணீர் சிந்திய இந்திரஜாவை குடும்பத்தினர் ஆறத்தழுவி வாழ்த்து தெரிவித்தனர். இந்த திருமணத்தில் நடிகர் சூரி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்திரஜாவின் கணவர் கார்த்திக், தொடர்வோம் என்கிற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரது திருமணம் மதுரையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் சென்னையில் நடைபெற உள்ள இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரைத்துறையினர் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

SCROLL FOR NEXT