அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தை அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கி உள்ளார். மேலும் இப்படத்திற்கு தமிழ் பிரபா திரைக்கதை வசனம் அமைத்துள்ளார். அரக்கோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ப்ளூ ஸ்டார் என்ற கிரிக்கெட் குழுவின் கேப்டன் (அசோக் செல்வன் ) தான் ஒரு விளிம்பு நிலை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பல்வேறு அவமானங்களையும், பிரச்சனை களையும் சந்திக்கிறார்.
அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. என்னதான் தியேட்டர் ரசிகர்கள் இருந்தாலும், ஓடிடிக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். தற்போது பலரது வீடுகளில் ஓடிடி சப்ஸ்கர்சன் போட பட்டுள்ளதால் ஓடிடி ரிலிசுக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்திய ரசிகர்கள் இந்த படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று முதல் காணலாம். காலை முதலே பலர் ஓடிடியில் ப்ளூ ஸ்டார் படத்தை போட்டு பார்த்து வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள ரசிகர்கள் டென்ட்கொட்டா மற்றும் சிம்ப்ளி சவுத் உள்ளிட்ட ஓடிடியில் ப்ளூ ஸ்டார் படத்தை கண்டு ரசிக்கலாம்.