bigg boss promo
bigg boss promo 
சின்னத்திரை / OTT

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிக்சன் போட்ட முதல் போஸ்ட்.. என்ன தெரியுமா?

விஜி

பிக்பாஸ் 7வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த வார இறுதியில் நிக்சன் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் 6 சீசன்கள் முடிந்த நிலையில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிக்பாஸின் 7வது சீசன் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த சீசனில் அதிரடியாக பல பல மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் விவகாரம் மிகவும் பேசுப்பொருளானது.

அடுத்த வகையில் இந்த சீசனில் பேசப்பட்ட ஒரு நபர் நிக்சன். பெண்களுடன் சில மோசமான செயல்களில் ஈடுபட்ட நிக்சனுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக வினுஷா குறித்து இவர் பேசிய கருத்திற்கு பிக்பாஸ் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

தொடர்ந்து ஐஷு, பூர்ணிமாவுடன் இவர் செய்த செயல்கள் முகம் சுழிக்க செய்தது. 90 நாட்களை கடந்து இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீசனில் கடந்த வாரம் நிக்சன் வெளியேற்றப்பட்டார். இவரின் எவிக்சனை கொண்டாடும் விதமாக ஐஷுவின் தந்தை போட்ட போஸ்டும் வைரலானது.

இப்படி பல எதிர்ப்புகள் ஓடி கொண்டிருக்கும் நிலையில், நிக்சன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.

Nixen Post

அதில், இப்போதுதான் எல்லாவற்றையும் பார்த்தேன், எதிர்ப்பார்க்காத எல்லாத்தையும் எதிர்ல பாத்தது என்ன பீல். எவ்ளோ சப்போர்ட், எவ்ளோ லவ், இவ்ளோ பேருக்கு என்னை புடிச்சிருக்குன்னு உள்ள இருக்க வரைக்கும் எனக்கு தெரியல. ஒருவேள தெரிஞ்சிருந்தா இன்னும் Effort போட்ருப்பனோ? ச்ச, அதெல்லாம் யோசிக்கிவே இல்ல, என்ன மன்னிச்சுடுங்க என்று பதிவிட்டுள்ளார்.  இதனை பார்த்த ரசிகர்கள் அதெல்லாம் ஒன்னு கிடையாது என கலாய்த்து வருகின்றனர்.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT