Biggboss 8 update 
சின்னத்திரை / OTT

ஆண்கள் அணிக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்… திட்டி சந்தோஷப்பட்ட தர்ஷா!

பாரதி

பிக்பாஸ் சீசன் 8ன் இன்றைய ப்ரோமோவில் ஆண்கள் அணி சிறிதும் எதிர்பாராத ஒன்றை பிக்பாஸ் கூறியிருக்கிறார். இதனால் தர்ஷா ஆண்கள் அணி மீது கோபப்படுகிறார்.

பிக்பாஸில் கடந்த 7 சீசன் கமலஹாசனால் தொகுக்கப்பட்டு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்றது. இதனையடுத்து விஜய் சேதுபதி தொகுக்கும் இந்த சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால், சென்ற வாரம் அவரின் கேள்விகள் மற்றும் கவுண்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சீசன் 8ல் தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன், சாச்சனா, அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின், ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டனர்.

போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இதில் 24 மணி நேரத்திற்குள் ஒரு எவிக்ஸன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போட்டியாளர்கள் பலர் சாச்சனாவை நாமினேட் செய்தார்கள். இதனால் அவர் ஒரு நாளுக்குள்ளையே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின் மீண்டும் சாச்சனா உள்ளே வந்தார். இதனையடுத்து இந்த வாரம் ரவீந்திரன் எவிக்ட் செய்யப்பட்டார். போகும்போது ஒவ்வொருவரையும் பற்றி விமர்சனம் சொல்லி தெறிக்கவிட்டுப் போய்விட்டார்.

அந்தவகையில் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இரண்டாம் வாரத்திற்கான கேப்டன் சத்யா.  அதற்குப்பின் ஆண்கள் அணியில் இருந்து தீபக்கும், பெண்கள் அணியில் இருந்து தர்ஷாவும் இடம் மாறினார்கள். அப்போது தர்ஷாவுக்கு பெண்கள் அணியினர் நிறைய அறிவுரை சொன்னார்கள். இதனையடுத்து மளிகை பொருள்களுக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் ஆண்கள் அணியினர் வெற்றி பெற்று அதிக பொருள்களை வாங்கி இருந்தார்கள்.

இந்த உருட்டு டாஸ்கில் ஆண்கள் அணியினர் 8000க்கு வெற்றிபெற்று 12 ஆயிரத்திற்கு பொருட்களை எடுத்ததால் எனக்கு தோன்றும் பொருட்களை மட்டுமே சமைக்க கொடுப்பேன் என்று பிக்பாஸ் கூறிவிட்டார். இதனால் தர்ஷா ஆண்கள் அணியிடம் உங்களால் நானும் பட்டினி கிடனுக்குமா என்று கூறி சண்டைப் போடுகிறார். பின் வேறு பக்கம் வந்து சண்டை போட்டதுக்கு சிரித்துக்கொண்டே வெளியேறுகிறார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT