அஸ்வின் கார்த்தி
அஸ்வின் கார்த்தி 
சின்னத்திரை / OTT

காதலியை கரம் பிடித்த பிரபல சன் டிவி சீரியல் நடிகர்.. யார் தெரியுமா?

விஜி

வானத்தைப் போல சீரியல் நடிகர் கார்த்தி தனது காதலி காயத்ரியை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராஜ் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய அஸ்வின் கார்த்தி, சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் துளசியின் கணவர் ராஜபாண்டி ரோலில் அஸ்வின் கார்த்தி நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு ஜீ தமிழ், விஜய் டிவி, கலைஞர் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ளார். பின்பு ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்தார்.

இந்தநிலையில், அஸ்வின் கார்த்திக்கும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் காயத்ரிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. காயத்ரி குணசேகரன் செலிபரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட். காயத்ரியும் கார்த்தியும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நேற்று இரு வீட்டார் முன்னிலையில் அவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது.

கடந்த செப்டம்பர் மாதம் இருவீட்டார் மட்டுமே கலந்து கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாவில் அஸ்வின் கார்த்தி ஷேர் செய்திருந்தார். ஆரம்பத்தில் இருவரும் நல்ல நணபர்களாக இருந்துள்ளனர். பின்பு இவர்களின் நட்பு காதலாக, இருவீட்டாரின் சம்மத்துடன் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. கார்த்தியும், காயத்ரியும் சமூகவலைத்தள பக்கங்களில் தங்களுடைய காதலை வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர். இருவரும் சேர்ந்து ரீல்ஸ்கள் பல பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று அவருக்கு சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இவர்களுடைய திருமணத்திற்கு வானத்தைப் போல தொடர் நடிகர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணம் குறித்து கார்த்தி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இருவர் ஒன்றான தருணம் எனப் பதிவிட்டுள்ளார்.

Mammoth Cave: உலகின் மிகவும் நீளமான குகையை எப்படி கண்டுபிடித்தார்கள் தெரியுமா?

தொலைந்த பொருள் திரும்ப கிடைக்கனுமா? இந்த கோவிலுக்குப் போங்க!

டைனோசர் காலத்திலேயே அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட உயிரினம் கண்டுபிடிப்பு… சுவாரசிய தகவல்!

கழுத்துப்பகுதியில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதை செஞ்சாலே போதுமே!

கோ ஆர்டினேடெட் செட்ஸ்! ட்ரெண்டி & பெஸ்ட்!

SCROLL FOR NEXT