Chandra Lakshman 
சின்னத்திரை / OTT

10 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் காதலிக்க நேரமில்லை 'சந்திரா'... என்ன சீரியல் தெரியுமா?

விஜி

காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் நடிகை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சன் டிவியில் ரீ எண்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் பாடல்களில் ஒன்றான "என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு உன்னை தேடி வாழ்வில் மொத்தம் அர்த்தம் தருவேன்" என்று பாடல் வரிகளைக் கொண்ட "காதலிக்க நேரமில்லை" சீரியலில் கதாநாயகியாக நடித்த சீரியல் நடிகை சந்திரா லக்ஷ்மணன் 10 வருடங்களுக்குப் பிறகு சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

சின்ன திரையில் சீரியலுக்கு போடப்படும் ஒரு சில பாடல்கள் மட்டும் பல வருடங்களை தாண்டினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து விடும். அந்த வகையில் மெட்டிஒலி சீரியலில் இடம் பிடித்த "அம்மி அம்மி அம்மி மிதித்து", கோலங்கள் சீரியலில் இடம்பிடித்த "கோலங்கள் கோலங்கள் இது அழகான கோலங்கள்" என்று பல பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த வரிசையில் இன்றளவும் பிரபலமாக இருக்கும் பாடல் தான், என்னை தேடி காதல் என்ற வார்த்தை பாடல். இந்த பாடலில் இடம்பெற்ற பிரஜன் தான் இன்று வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இதில் ஹீரோயினாக நடித்தவர் தான் நடிகை சந்திரா லட்சுமண். இவர் பல சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்திருந்தாலும் இவர் இப்போது எங்கே போனார் என்று பலருக்கும் தெரியாது.

சமீபத்தில் 40 வயதில் ஆண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு சன் டிவியில் சீரியலில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அதிலும் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்த இவர் இப்போது வில்லியாக நடிக்கிறார். அது சன் டிவியின் கயல் சீரியல் தான். கயலுக்கு ஏற்கனவே அவருடைய பெரியப்பா வில்லனாக இருக்கும் நிலையில் அவரை விடவும் பணக்கார திமிரோடு இருக்கும் வில்லியாக இப்போது சந்திரா அறிமுகம் ஆகி இருக்கிறார். இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. கயல் சீரியல் ஏற்கனவே டிஆர்பியில் நன்றாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், இவரின் ரீ எண்ட்ரியால் இன்னும் புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிழாக்களில் கொடியேற்றம் மற்றும் வாகன பவனியின் தத்துவம் தெரியுமா?

வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

'வித்யாலட்சுமி திட்டம்' - உயர்கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களுக்கு கல்விக் கடன் உதவி!

SCROLL FOR NEXT