Shalin zoya 
சின்னத்திரை / OTT

குக்வித் கோமாளியில் மீண்டும் எண்ட்ரி ஆன ஷாலின் சோயா..!

விஜி

குக்வித் கோமாளி 5வது சீசனின் பேவரைட் போட்டியாளராக இருந்த சோயா எலிமினேட் ஆன நிலையில் மீண்டும் அவர் எண்ட்ரி கொடுக்கும் புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக புகழ்பெற்ற ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. குக்கிங் ஷோவை அழகாக எடுத்து செல்லும் இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளுக்கு அதிக ரசிகர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சி மூலம் தான் நிறைய கோமாளிகளுக்கு பல வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆதரவு இந்த நிகழ்ச்சிக்கு உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், போட்டியாளர்களை விட... அவர்களுக்கு உதவி செய்ய கொடுக்கப்படும் கோமாளிகள் தான். பழைய கோமாளிகளான புகழ், குரோஷி, சுனிதா இருக்க புதுசாக ஏற்கனவே விஜய் டிவியில் கலக்கபோவது யார் நிகழ்ச்சியில் கலக்கிய விஜய் டிவி ராமர், தங்கதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிக உற்சாகமடைந்துள்ளனர். பெரிதளவு பழைய சீசன்களை போல வரவேற்பு இல்லாவிட்டாலும், சில ரசிகர்களின் மனதை தொட்டுள்ளது இந்த சீசன்.

இதில் பலருக்கும் பேவரைட் போட்டியாளராக திகழ்ந்தவர் ஷாலின் சோயா. அதாவது TTF வாசனின் காதலியாக அறியப்படும் ஷாலின் சோயா சக போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு நல்ல எண்டர்டெயினாக இருந்தார். இந்த 5வது சீசனில் பல விஷயங்கள் புதியது, இதனால் நிகழ்ச்சி கொஞ்சம் பிக்கப் ஆக நேரமும் எடுத்தது என்றே கூறலாம். கடந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து ஷாலின் ஷோயா வெளியேற்ற பட்டார். ஆனால் அந்த எலிமினேஷன் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருந்தது. ரசிகர்கள் பலரும் மிஸ் யு சோயா, உங்களுக்காக தான் நிகழ்ச்சி பார்த்தோம் என்று எல்லாம் கூறி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. அதில், ஸ்பெஷல் போலீஸாக குக் வித் கோமாளி 5 செட்டிற்கு மீண்டும் வருகிறார் ஷாலின் ஷோயா. அவரை மீண்டும் செட்டிற்குள் பார்த்ததும் போட்டியாளர்கள் மற்றும் குக்குகள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்கள். ரசிகர்கள்பலரும் வா தலைவா என கமெண்டுகளை தட்டி உற்சாகமடைந்து வருகின்றனர். இந்த புரோமோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT