BB 8 Update 
சின்னத்திரை / OTT

பிக்பாஸ் 8: ஜாக்குலின் செயலால் கடும்கோபத்தில் தர்ஷிகா… வெடிக்கும் சண்டை!

பாரதி

பிக்பாஸ் சீசன் 8ல் தற்போது பொம்மை டாஸ்க் நடைபெறுகிறது. இதில் ஜாக்குலின் செய்த செயலால் தர்ஷிகா கொந்தளித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் இப்போது ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா மற்றும் வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து பிக்பாஸ் வீடு தற்போது பொம்மை டாஸ்க்கால் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரின் பெயர்க்கொண்ட பொம்மையை டால் ஹவுஸ் ஸ்லாட்டில் வைக்க வேண்டும். இல்லை என்றால், அவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அப்போது ரஞ்சித் தர்ஷிகாவின் பொம்மையை எடுத்து அங்கு வைக்க செல்வார். அப்போது ஜாக்குலின் அந்த பொம்மையை வாங்கிவிட்டு அவருடைய பொம்மையை கொடுப்பார்.

இந்த செயலால் தர்ஷிகா போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்பதால், தர்ஷிகா கடும்கோபத்தில் உள்ளார்.

தர்ஷிகா கேம்னா இண்டிவிஜுவலா விளையாடுங்க… விளையாட முடியலனா வெளில போயிருங்க என்று கோபத்தில் கூறிக்கொண்டே அங்கிருந்து வேகமாக சென்றுவிடுகிறார்.

இந்த சம்பவம் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. ஒருபக்கம் சண்டை சுவாரஸ்யமாக இருந்தாலும், மறுபக்கம் இந்த டால் டாஸ் அவ்வளவு தீவிரமானதாக இருக்காது என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

நேற்று ஷாப்பிங் டாஸ்க்கில் ஜெஃப்ரி காமெடியாக செய்த அஃப் பாயில் வீடியோ ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதேபோல் கடந்த வாரம் விஜய் சேதுபதி இரண்டு வீடுகளும் ஒன்றிணையும் என்று கூறிய நிலையில், இனி போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் நேர்மையானவரா? இல்லை நேர்மையானவராக நடிக்கிறீர்களா?

செத்த பிறகும் முடி வளருமா?

சபரிமலை ஐயப்பன் சிலையை யார் செய்ய வேண்டும்? சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது தெரியுமா?

சிறுவர் சிறுகதை; முல்லாவின் தந்திரம்!

நாம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் 40,000-க்கும் அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளனவாம்! சுத்தம் செய்வது எப்படி?

SCROLL FOR NEXT