Dubbing serial 
சின்னத்திரை / OTT

மீண்டும் வருகிறது டப்பிங் சீரியல்… ஆனால் பாலிமர் தொலைக்காட்சியில் இல்லை!

பாரதி

ஒருகாலத்தில் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மக்கள் மனம் கவர்ந்த இரண்டு சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளன. ஆனால், வேறு ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளன.

பாலிமர் தொலைக்காட்சியில் தொடர்ந்து டப்பிங் சீரியல் ஒளிபரப்பாகி வந்த சமயத்தில் பாலிமர் டிஆர்பி ரேட்டிங்கில் மற்ற தொலைக்காட்சிகளுக்கு கடும் போட்டியாக இருந்தது. ஏனெனில், அந்தளவிற்கு மனம் கவர்ந்த டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகின. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனைத்து சீரியல்களையும் விரும்பிப் பார்ப்பார்கள். இன்றளவும் சமூக வலைதளங்களில் அந்த டப்பிங் சீரியல்களின் தலைப்பைப் போட்டு பொன்னான காலங்கள் என்று பதிவிட்டுதான் வருகின்றனர்.

மேலும் சிலர் மீண்டும் இந்த சீரியல்களையெல்லாம் ஒளிபரப்புங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இந்த கோரிக்கைகள் பாலிமர் தொலைக்காட்சிக்கு கேட்டதோ? இல்லையோ? கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றாகவே கேட்டுவிட்டது.

ஆம்! அந்த இரண்டு சீரியல்களையும் ரீ டெலிகேஸ்ட் செய்யப்போவது கலைஞர் தொலைக்காட்சிதான். அதுவும் நமக்குப் பிடித்த உள்ளம் கொள்ளைப் போகுதடா 1 மற்றும் இனி எல்லாம் வசந்தமே சீரியல்கள் ஒளிபரப்பாகவுள்ளன. இரவு 9 மணிக்கு உள்ளம் கொள்ளை போகுதடாவும், இரவு 9.30 மணிக்கு இனி எல்லாம் வசந்தமே தொடரும் வரும் நவம்பர் 18ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறதாம். 

மீண்டும் நாம் அந்த பொற்காலத்திற்கு போகும் நேரம் வந்துவிட்டது.

இதேபோல் தந்தி டிவியில் சமீபக்காலமாக பல டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகிதான் வருகின்றன. ஆனால், அவையனைத்துமே புராண இதிகாச கதைகள்தான். ஆனாலும் அந்த சீரியல்களின் டப்பிங் பலருக்கு பிடிக்கவில்லை என்பதால் தந்தியால் மக்களை திருப்திப்படுத்த முடியவில்லை.

இந்த விஷயத்தில் கலைஞர் டிவி என்ன செய்யப் போகிறது என்பது தெரியவில்லை. அதாவது ஏற்கனவே டப்பிங் செய்த அதே சீரியலை ஒளிபரப்பப்போகிறதா? அல்லது புதிதாக டப் செய்யப் போகிறதா என்று.

ஆனால், பாலிமர் ஹிட்டானதற்கு முறையான அழகான டப்பிங்தான். பார்ப்போம் எப்படி இருக்கும் என்று? பாலிமர் போல் கலைஞர் தொலைக்காட்சி டஃப் கொடுக்குமா என்று?

அப்படியே இந்த நினைத்தாலே இனிக்கும், உறவே உயிரே, மதுபாலா போன்ற சீரியல்களையும் போடலாமே….

சிறுகதை: லட்டு தின்ன ஆசையா? யாருக்கு?

சோறு கண்ட இடம் சொர்க்கம் - ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் விபரம் தெரியுமா?

உடலுக்கு சூப்பர் சுகம் தரும் சுக்கு பாலின் ஆரோக்கிய நன்மைகள்!

வயசானாலும் இளமையாத் தெரியணுமா? அப்போ உணவுல இதையெல்லாம் சேர்த்துக்கோங்க..

எனது மகனின் 10 வருட வாழ்க்கையை வீணாக்கியது தோனி, விராட், ரோகித்தான் – சஞ்சு சாம்சன் தந்தை முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT