Theatres 
வெள்ளித்திரை

உலகின் மிகப் பெரிய மிக சுவாரஸ்யமான 6 திரையரங்கங்கள்!

A.N.ராகுல்

சினிமா - அனைத்து வயதினரும் தங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக நேசிக்கும் ஒரு பொழுதுபோக்கு உலகம். அப்படிப்பட்ட சினிமாவை, அதுவும் நமக்கு பிடித்த நடிகர்களின் படத்தை ஆரவாரத்தோடு கூட்டத்தோடு கூட்டமாய் திரையரங்குகளில் பார்ப்பதையே ஒரு லட்சியமாகக் கொண்ட நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி நமக்கு பிடித்த நடிகரின் படத்தை ஒரு பெரிய திரையரங்கில் பார்த்தால் எப்படி இருக்கும்? வாருங்கள்... அதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

Kinepolis Madrid Ciudad de la Imagen, ஸ்பெயின்:

Kinepolis Madrid Ciudad de la Imagen

ஸ்பெயினில் உள்ள Kinepolis Madrid Ciudad de la Imagen உலகின் மிகப்பெரிய சினிமா தியேட்டர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது. 25 திரைகள் மற்றும் மொத்தம் 9,200 இருக்கைகள்கொண்ட இந்தத் திரையரங்கம் 3டி மற்றும் 4டி காட்சிகள் உட்பட பல்வேறு அனுபவங்களை வழங்குகிறது. இந்தத் திரையரங்கு அதன் மிகப்பெரிய திரைகள் மற்றும் அதிநவீன ஒலி அமைப்புகளுக்குப் புகழ்பெற்றது. அங்கு வரும் பார்வையாளர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்குகிறது. மற்றும் இங்குள்ள விஐபி லவுஞ்ச்(VIP lounge) பகுதி ஆடம்பரத்தை விரும்புவோர்க்கான இடமாக விளங்குகிறது, இங்கு வரும் பார்வையாளர்கள் ஒரு திரைப்படத்திற்கு முன்னும் பின்னும் ஓய்வெடுக்க முடியும்.

ராக்ஸி தியேட்டர் (Roxy Theatre), நியூயார்க் நகரம், அமெரிக்கா:

Roxy Theatre

நியூயார்க் நகரத்தில் உள்ள ராக்ஸி தியேட்டர் இன்று செயல்படவில்லை என்றாலும், அது சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. 1927இல் திறக்கப்பட்ட இது, ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றாக இருந்தது. 6,000க்கும் மேற்பட்ட இருக்கை வசதி கொண்டது. ராக்ஸி அதன் ஆடம்பரமான அலங்காரத்திற்காக உலகம் முழுக்க அறியப் பெற்றது. அதன் வரலாற்று முக்கியத்துவமும் கட்டடக்கலை அழகும் சினிமா ஆர்வலர்களால் இன்று வரை நினைவுகூறப்படுகிறது.

சினிசிட்டா (Cinecittà), ரோம், இத்தாலி:

Cinecittà

ரோமில் உள்ள சினிசிட்டா ஒரு சினிமா தியேட்டர் மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றாகும். இங்குள்ள தியேட்டரில் 5,000 பேர் அமரக்கூடிய வசதி உள்ளது. அதன் தனித்துவமான கட்டடக்கலை வரலாற்றின் முக்கியத்துவமாக அறியப்படுகிறது.

‘பென்-ஹர்’ மற்றும் ‘கிளியோபாட்ரா’ உட்பட பல பிரபலமான படங்கள் இங்குதான் படமாக்கப்பட்டன. அதன் வளமான வரலாறு மற்றும் பிரமாண்டமான வடிவமைப்பு காரணமாக சினிசிட்டா திரைப்பட பார்வையாளர்கள் மற்றும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாக திகழ்கிறது.

TCL சீன தியேட்டர் (Chinese Theatre), லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா:

TCL Chinese Theatre

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள TCL சீன திரையரங்கம் 1927இல் திறக்கப்பட்ட ஒரு தனித்துவமிக்க சினிமா தியேட்டர் ஆகும். ஹாலிவுட் நட்சத்திரங்களின் கைரேகைகள் மற்றும் கால்தடங்களைக் கொண்ட அதன் தனித்துவமான நுழைவாயிலுக்கு இது பிரபலமானது. திரையரங்கில் 1,100 பேர் அமரமுடியும். அதன் ஆடம்பரமான அலங்காரம், மேம்பட்ட ஒலி அமைப்புக்காக உலகெங்கும் பேசப்படுகிறது. TCL சீன திரையரங்கம் வரலாற்று சிறப்பையும் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் அனுபவத்தையும் சேர்த்து வழங்குகிறது.

UME சினோபெக் (Sinopec), செங்டு, சீனா:

UME theater

சீனாவின் செங்டுவில்(Chengdu) உள்ள UME Sinopec, 30 திரைகளை கொண்ட உலகின் மிகப்பெரிய சினிமா தியேட்டர்களில் ஒன்றாகும். இந்தத் திரையரங்கம் அதன் அதிநவீன தொழில்நுட்பத்திற்காக பிரபலமாக அறியப்படுகிறது. இங்குள்ள IMAX மற்றும் 4DX திரையிடல்களால், பார்வையாளர்களுக்குப் பரவசமூட்டும் அனுபவத்தை வழங்குகிறது. அதிக எண்ணிக்கையிலான திரைகள், பார்வையாளர்களின் ரசனைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப, பலதரப்பட்ட திரைப்படங்களை ஒரே நேரத்தில் காண்பிக்கும் வசதியும் இங்குள்ளது.

சினிபோலிஸ் விஐபி (Cinepolis VIP), மும்பை, இந்தியா:

Cinepolis VIP

மும்பையில் உள்ள சினிபோலிஸ் விஐபி அதன் ஆடம்பர வசதிகளுக்கும் hi-tech அனுபவத்துக்கும் அறியப்படுகிறது. உங்கள் வசதிக்கேற்ப சாய்த்து கொள்ளகூடிய இருக்கைகள், உங்களுக்கென்று தனிப்பட்ட நல்ல உணவை சாப்பிட விருந்தோம்பல் வசதி ஆகியவை உள்ளன. இதனால் பார்வையாளர்கள் திரைப்படத்தை நன்கு ரசிக்க முடியும். தேவைப்பட்டால் ஓய்வெடுப்பதற்கான பிரத்யேக விஐபி லவுஞ்ச் பகுதியும் உள்ளது.

உலகின் இந்த மிகப்பெரிய திரையரங்குகள் அவற்றின் அளவு காரணமாக மட்டுமல்லாமல், அவை வழங்கும் தனித்துவமான அம்சங்களாலும் இன்று வரை தனித்து நிற்கின்றன. அங்குள்ள அதிநவீன ஒலி அமைப்புகள் மற்றும் பிரமாண்ட திரைகள் முதல் ஆடம்பரமான இருக்கைகள் மற்றும் விஐபி சேவைகள் வரை, இந்தத் திரையரங்குகள் எளிதில் மறக்க முடியாத ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை வழங்குகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உலகத்தரத்திலான வசதிகளின் கலவையால் பார்வையாளர்கள் முழு ஈடுபாட்டுடனும், வசதியுடனும் இருப்பதை உறுதிசெய்து, ஒவ்வொருத்தரின் சினிமா அனுபவத்தையும் ஒரு சிறப்பு நிகழ்வாக அமைத்து மகிழ்விக்கின்றன.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT