AjithKumar 
வெள்ளித்திரை

இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸை.. மாஸ் லுக்கால் ரசிகர்கள் குஷி!

விஜி

டிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் அஜித் அஜர்பைஜா, துபாய் என உலாவி வருகிறார்.

இயக்குனர் மகிழ் திருமேனி செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணை இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு இயக்குனராக அறிமுகமானவர். இவரின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கேசான்ரா என பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை பிரபல லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்ற வருடம் மே 1 அஜித் மற்றும் மகிழ் திருமேனியின் AK 62 விடாமுயற்சி என பெயர் அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 தொடங்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் ரசிகர்களுக்கு போஸ்டர், பாடல் என படத்தின் அப்டேட் வெளியாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்களின் ஆதரவாக தினசரி அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

சமூக வலைதளங்களில் ஈடுபாடில்லாத அஜித், எந்த ஒரு சோசியல் மீடியா பக்கமும் இல்லை. இந்த நிலையில் அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி தனது கணவர் அஜித்தின் ரீசெண்ட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும் தற்போது அஜித் கோட் ஷூட்டுடன் இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அஜித்தின் இந்த போட்டோ பப்ளிசிட்டியை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ் சினிமாவில் பப்ளிசிட்டியை விரும்பாத ஒரே நடிகர். டெய்லி ஒரு ஃபோட்டோ மட்டும் ரிலீஸாகும். மத்தபடி சத்தியமா பப்ளிசிட்டி பிடிக்காது என குறிப்பிட்டுள்ளார்

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT