குமரிமுத்து
குமரிமுத்து 
வெள்ளித்திரை

நடிகர் குமரிமுத்து கல்லறையில் எழுதபட்ட வசனம் வைரல்! அப்படி என்ன இருக்கு?

விஜி

நடிகர் குமரிமுத்து 90ஸ்களில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர். குமரிமுத்து என்று சொன்னாலே அனைவரின் ஞாபகத்திற்கு வருவது குபீர் சிரிப்பு தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தான் குமரிமுத்து. சிறுவயதிலிருந்தே சினிமாவும் நாடகமும்தான் இவரின் இரண்டு கண்கள். எட்டாம் வகுப்பு வரை படித்ததே அவரின் பெரிய சாதனைதான். நோட்டுப்புத்தகங்களும் வகுப்பறைகளும் கசந்தன. மேடைகளும் நாடக வசன பேப்பர்களும் இவரைக் கொள்ளைகொண்டன. தானே எழுதி நாடகங்களை அரங்கேற்றினார். மற்றவர்களின் நாடகங்களிலும் நடித்தார். இவரின் நடிப்பு புதுபாணியாக இருந்ததை குமரி ரசிகர்கள் கண்டுகொண்டார்கள். மேடைக்கு இவர் வந்தாலே தெறித்துச் சிரித்தார்கள். இவையெல்லாம் குமரிமுத்துவுக்குள் நம்பிக்கையை இன்னும் ஆழமாக விதைத்தன.

முதலில், பொய் சொல்லாதே’ என்ற படத்தில் சிறுவேடத்தில் நடித்தார். அதுவும், நாகேஷுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, முதல் படத்திலேயே கிடைத்தது. ‘தங்கதுரை’, ‘இவள் ஒரு சீதை’, ‘வெகுளிப்பெண்’ என குமரி முத்துவுக்கு திடீர்திடீரென வாய்ப்புகள் வந்தன. இப்படி தான் அடுத்தடுத்து பல சாதனைகளையும் புரிந்தார்.

முதன்முதலில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனம் செய்தவர். அதனால் சங்கத்திலிருந்து நிரந்தர உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். அதை எதிர்த்து அவர் நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்று மீண்டும் சங்கத்தில் இணைக்கப்பட்டார்.

குமரிமுத்து கல்லறை

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்த நிலையில், இவரின் கல்லறையில் பொறிக்கப்பட்ட வசனம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், It is time for the God.. To enjoy his laughter என்று எழுதபட்டிருக்கும். அதாவது இவரின் சிரிப்பை கடவுள் எஞ்சாய் செய்ய வேண்டிய நேரம் என அர்த்தம். இந்த வசனம் தான் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.

ஸ்படிக மாலையால் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம்!

‘கத்புட்லி’ பொம்மலாட்டம் பற்றித் தெரிந்து கொள்ளுவோமா?

நல்ல சகுனம், கெட்ட சகுனம் எவை தெரியுமா?

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுகளை இப்படிச் சாப்பிட்டு பாருங்களேன்!

க்ளூடாமைன் அதிகமுள்ள உணவுகள் தெரியுமா?

SCROLL FOR NEXT