ரஜினி வீட்டு நவராத்திரி விழாவில் பிரபலங்கள்! 
வெள்ளித்திரை

துர்கா ஸ்டாலின் முதல் விஜய்யின் தாயார் வரை.. களைகட்டிய ரஜினி வீட்டின் நவராத்திரி விழா!

விஜி

டிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் நவராத்திரியும் ஒன்று. புரட்டாசி மாதம் முடிந்தவுடன் இந்த திருவிழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழாவை பலரும் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் கொண்டாடப்பட்டது.

இந்த நவராத்திரி விழா கொண்டாடுபவர்கள் கொலு பொம்மைகள் வைத்து அனைவரையும் வீட்டிற்கு அழைத்து விழாவாக கொண்டாடுவர். அந்த வகையில் நவராத்திரியின் கடைசி நாளான நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்தும் அவரது வீட்டில் நவராத்திரி விழாவுக்காக அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். 

இதை ஏற்ற ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளதால், அவர் இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் ரஜினியின் மனைவி லதா, அவரது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யா ஆகியோர் இந்த நவராத்திரி கொண்டாட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழைசை செளந்தரராஜன் இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் இந்த விழாவில் பங்கேற்றார். 

முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டார். அப்போது தனுஷின் மகன் லிங்கா மற்றும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.  மேலும், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ரஜினி வீட்டு நவராத்திரி கொண்டாட்டத்தில் குடும்பத்தினருடன் வந்து கலந்துகொண்டனர். 

இதுதவிர நடிகர் விஜய்யின் தாயான ஷோபா, நடிகை மீனா, பழம்பெரும் நடிகை லதா உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Jeff Bezos-ஐ கோடீஸ்வரன் ஆக்கிய விதி என்ன தெரியுமா? 

முகத்தை மூடித் தூங்குபவரா நீங்கள்? அச்சச்சோ போச்சு!

குளிர்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!

முகம் ஒரு ஓவியம் என்றால், உதடுகள் அதன் இதயம்!

மரங்களைப் பற்றி மனிதர்கள் ஏன் கவலைப்படுவதில்லை?

SCROLL FOR NEXT