Garudan
Garudan 
வெள்ளித்திரை

மாஸ் காட்டும் 'கருடன்' பட ட்ரைலர்... எப்படி இருக்கு தெரியுமா?

விஜி

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் கருடன் படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரான விடுதலை 1 படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வரும் நிலையில், கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்தின் கொட்டுக்காளி படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நிவின் பாலியுடன் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். இந்த ஏழு கடல் ஏழு மலை மற்றும் விடுதலை 2 படங்கள் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சமீபத்தில் திரையிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படங்கள் தவிர வெற்றிமாறன் எழுதி, துரை செந்தில்குமார் இயக்கி வரும் கருடன் படத்தில் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோருடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கருடன் திரைப்படம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விடுதலை படத்தையும் தாண்டி ஆக்சன் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். இதுவரை சூரியை இப்படி பார்த்ததே இல்லையென ரசிகர்கள் கமெண்ட்டுகளை தட்டி வருகின்றனர். மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார் நடிகர் சூரி.

ட்ரைலர் எப்படி?

சசிகுமார், உன்னி முகுந்தன் நல்ல நண்பர்கள். உன்னி முகுந்தனிடம் விசுவாசியாக இருக்கிறார் சூரி. விசுவாசத்தின் முழு உருவமாக இருக்கும் சூரி, தன்னை வளர்த்த குடும்பத்துக்காக சம்பவம் ஒன்றை செய்ய அதனால் பிரச்சினை எழுவதாக ட்ரெய்லரின் காட்சிகள் காட்டுகிறது. இதில் அருவாளுடன் சூரி மிரட்டும் தோனியில் இருக்கும் காட்சிகள் மெய் சிலிர்க்க செய்கிறது. மேலும் யுவனின் இசையால் உடம்பெல்லாம் அடிகக்டி சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. கருடன் பட டிரைலரில் சூரி இடம்பெறும் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

பள்ளிகொண்ட பெருமாளாகக் காட்சி அளிக்கும் அதிசய மலை!

ஜீரணப் பிரச்னைகளுக்குக் கைகண்ட மருந்தாக விளங்கும் ஓமம்!

வலிப்பு நோய்க்கு நிவாரணம் தரும் சடாமாஞ்சில் மூலிகை!

மனப் பதற்றத்தை உடனே குறைக்க உதவும் 10 எளிய வழிமுறைகள்!

ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்ட தமிழர்களின் வீரத்தைப் பறைச்சாற்றக்கூடிய ஆயுதம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT