Actor soori 
வெள்ளித்திரை

முன்னணி நடிகராக பட்டையைக் கிளப்பும் நடிகர் சூரி!

கண்மணி தங்கராஜ்

சூரியின் மூன்று திரைபடங்களுக்கும் சர்வதேச அங்கீகாரம். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சூரி. காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறிய ஒருசில நடிகர்களுள் இவரும் ஒருவர். சூரி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில், கதாநாயகனாக தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி கொண்டே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor soori

காமெடியன் டு கதாநாயகன்:

சினிமா மீது சூரிக்கு இருந்த அளவற்ற ஆர்வத்தின் காரணமாக சொந்த ஊரான மதுரையை விட்டுச் சென்னைக்கு வந்தார். அதன் பிறகு முழுமூச்சாக சினிமாவிலேயே இறங்கி, சினிமா சார்ந்த வேலைகளிலேத் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அடுத்தபடியாக திரைப்படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களிலும் நடிக்கத் துவங்கிய இவர் 'சங்கமம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில் சில நொடிகள் திரையில் தோன்றியிருக்கிறார். அதே போல வின்னர், தீபாவளி போன்ற படங்களில் ஒரு சில காட்சிகளிலும், சின்னத்திரையில் குறுகிய வேடங்களிலும் நடித்துள்ளார். சினிமாத்துறையில் தொடர் முயற்சியில் முற்றிலுமாக இறங்கிய சூரிக்கு அவரது கடின உழைப்புக்கான பரிசாக, இயக்குநர் சுசீந்திரனின் 'வெண்ணிலா கபடி குழு' என்ற திரைப்படத்தில் காமெடியனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்திரைப்படத்தில் பரோட்டாவை வைத்து அவர் செய்த சேட்டையைக் கண்டு சிரிக்காதோர் இருக்கவே முடியாது. அதன் பிறகு அவர் 'பரோட்டா சூரி' என்று பலராலும் அறியப்படத்துவங்கினார். அதனைத் தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தன. தேடி வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட சூரி, தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னோக்கி நகரந்தார். முன்னனி நடிகர்களான ரஜினி, சூர்யா, அஜித், விஜய், கார்த்தி, சிவகார்த்திக்கேயன் போன்ற நடிகர்களோடு இணைந்து காமெடியனாக நடித்து தனது நகைச்சுவைத் திறமையின் மூலம் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்கவைத்திருக்கிறார் சூரி.

Actor soori

திரைப்பட ஹிரோவாக:

திரையில் காமெடியனாக வெளிவந்த சூரிக்கு இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்தில் ஹிரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படம் சூரியின் சினிமாப் பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. விடுதலை பாகம் 1 படத்தில் சூரியின் நடிப்பும் சண்டைக்காட்சிகளை அவர் கையாளும் விதமும் திரையில் பார்க்கும் ரசிகர்களை சிலிர்ப்பூட்டச் செய்தன. பின்னர் தொடர்ந்து இயக்குநர் ராமின் 'ஏழு கடல் ஏழு மலை' வினோத் ராஜின் 'கொட்டுக்காளி' மற்றும் துரை செந்தில் குமாரின் 'கருடன்' என அடுத்தடுத்த திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

சர்வதேச அங்கீகாரம்:

நடிகர் சூரியின் 'விடுதலை' மற்றும் 'ஏழு கடல் ஏழு மலை' என இவ்விரண்டு திரைப்படங்களும், 2024 ஆம் ஆண்டுக்கான ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. அதே சமயத்தில் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில், சூரி நடித்துள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம் ஃபர்லின் சர்வதேசத் திரைப்பட விழா 2024 க்கிற்கு தேர்வாகியுள்ளது. இது தொடர்பான செய்திகளும் மற்றும் புகைபடங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

SCROLL FOR NEXT