VijayaKumar Grand daughter wedding 
வெள்ளித்திரை

ஜோராக நடந்த விஜயக்குமாரின் பேத்தி திருமணம்... திரைபிரபலங்கள் நேரில் வாழ்த்து!

விஜி

விஜயகுமாரின் பேத்தியின் திருமண விழா களைகட்டி வரும் நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் விஜயக்குமாருக்கு முத்துகண்ணு மற்றும் நடிகை மஞ்சுளா என 2 மனைவிகள். முதல் மனைவியின் மகள்கள் தான் அனிதா, கவிதா மற்றும் மகன் அருண் விஜய். அருண் விஜய் பிறந்த சில வருடங்களில், நடிகை மஞ்சுளாவுடன் ஒன்றாக இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் முட்டிக்கொள்ளவே, முதல் மனைவி சம்மதத்துடன், மஞ்சுளாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேலும் மஞ்சுளா மூலம் நடிகர் விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீத்தா, மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் பிறந்தனர். இதில் வனிதா விஜயக்குமார் மட்டும் குடும்ப தகராறு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார்.

விஜயக்குமாரின் 2வது மகளான அனிதா விஜயக்குமார் ஒரு மருத்துவர் ஆவார். இவரின் மகள் தான் தியா. வெளிநாட்டில் செட்டில் ஆன இவர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்கள். இந்த நிலையில் இவரது மகள் தியாவிற்கு இன்று கோலாகலமாக ஷெர்டன் கிராண்ட் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. வர்களது திருமணத்துக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், சூர்யாவின் குடும்பத்தினர் உள்பட ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

VijayaKumar Grand daughter wedding

இவர்களின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். இதுதவிர நடிகைகள் மீனா, சினேகா உள்ளிட்ட பிரபலங்களும் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

VijayaKumar Grand daughter wedding

இது ஒரு புறம் இருக்க இந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயக்குமாருக்கு அழைப்பு விடுக்கப்படாததால், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் சிங்கம் நடந்து வருவது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ள வனிதா, ஒட்டுமொத்த கூட்டம் ஓர் இடத்தில் சேரும்போது நீங்கள் மட்டும் தனியா இருந்தால், நீங்கள் எவ்வளவு பலம் வாய்ந்தவர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT