ஒரு கையில் பெரியார்... ஒரு கையில் விநாயகர்... வெளியானது வணங்கான் டீசர்!

வணங்கான்
வணங்கான்
Updated on

அருண் விஜய்யின் வணங்கான் பட டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னணி இயக்குனராக வளம் வரும் இயக்குனர் பாலாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி என முக்கியமான திரைப்படங்களை இயக்கிய பாலா கடைசியாக இயக்கிய வர்மா திரைப்படம் வெளியாகவில்லை. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா, தங்களுக்கு திருப்தியில்லை என வர்மாவை தயாரித்தவர்கள் படத்தை முற்றாக நிராகரித்தனர். பிறகு ஆதித்ய வர்மா என்ற பெயரில் அதே கதையை வேறொரு இயக்குநரை வைத்து இயக்கி வெளியிட்டனர்.

இதனால் இந்த படம் பாலாவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. அவர் மீண்டும் பழைய பாலாவாக திரும்பி வர வேண்டும் என பலரும் ஆசைப்படுகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் பாலா, சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தைத் தொடங்கினார். ஒரு ஷெட்யூல்ட் முடிந்த நிலையில், இந்த படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகினார். இது குறித்து அறிக்கை வெளியிட்ட பாலா, “வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது” என அதில் கூறியிருந்தார்.

The teaser of Arun Vijay's Vanangaan is out and is going viral.
இதையும் படியுங்கள்:
தனுஷ் 50: மீண்டும் இயக்குநர் அவதாரமெடுக்கும் நடிகர் தனுஷ்!
வணங்கான்

இதையடுத்து, வணங்கானில் அருண் விஜய் ஒப்பந்தமானார். ஒரு கையில் பெரியார் சிலையும், மறுகையில் விநாயகர் சிலையுமாக அருண் விஜய் இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதன் பிறகு படம் குறித்த எந்தத் தகவலும் இல்லாமலிருந்தது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அருண்விஜய் ஒரு கையில் பெரியாருடனும், ஒரு கையில் விநாயகருடனும் கிணற்றுக்குள் இருந்து சேற்றுடன் வரும் காட்சி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. நிச்சயம் இது அருண் விஜயின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய மையில் கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com