நடிகர் விஷால் நேற்று முன்தினம் (நவம்பர் 6) மொத்தம் 11 ஜோடிகளுக்கு பட்டு வேஷ்டி, பட்டு சேலை மற்றும் சீர்வரிசைகளோடு இலவச திருமணம் நடத்தி வைத்தார்ததன் பின்னர் அந்த விழாவில் அவர் ரிலாக்ஸ்டாக பேசினார்..
‘’இந்த மணப் பெண்களை எனது உடன்பிறந்த தங்கைகள் போலவே பார்க்கிறேன். ஆகவே, மாப்பிள்ளைகள் அனைவரும், என்னை வேட்டியை மடித்துக் கட்ட வைத்துவிடாதீர்கள். இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம், போனோம் என்று இல்லாமல் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பேன். என் தங்கைகளிடம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். அதற்கு மாப்பிளைகளாகிய நீங்கள் தான் முழு பொறுப்பு.
என் தங்கைகளை நன்றாகப் பார்த்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதேபோல் இந்த 11 தம்பதிகளின் குழந்தைகளுடைய கல்வி செலவு மற்றும் எதிர்காலத்தை ‘தேவி அறக்கட்டளை’ பார்த்துக் கொள்ளும். உங்கள் அனைவரின் முகத்தில் சந்தோஷத்தைப் பார்த்தால் நான் தானாகவே மகிழ்ச்சி அடைவேன்.
‘’11 பேருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறாய்! நீ எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்?’’ என்று பலரும் கேட்டார்கள். நான் சொன்னால் சொன்னதுதான். நடிகர் சங்கக் கட்டிடம் பூர்த்தியானதும் அதில்தான் என் திருமணம் நடக்கும். அதுவரை வெயிட் ப்ளீஸ்..
சமீபத்தில் நான் காசிக்கு சென்று வந்ததைக்கூட சிலர் அரசியல் ஆக்க பார்த்தார்கள். ஆனால், அரசியல் நோக்கத்திற்காக காசி செல்லவில்லை. சில விஷயங்களை அங்கு சென்றால்தான் உணர முடியும்’’ என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் விஷால்.