வெள்ளித்திரை

காதல் கணவருக்காக பாட்டு பாடி அசத்திய பரினிதி சோப்ரா.. வைரலாகும் வீடியோ!

விஜி

னது காதல் கணவர் ராகவ் சட்டாவுக்கு, நடிகை பரினிதி சோப்ரா ஓ பியா பாடலை பாடி அசத்தியுள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் உறவினரும், பிரபல பாலிவுட் நடிகையுமான பரினீதி சோப்ரா, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவை கரம்பிடித்தார். நீண்ட காலமாக காதலித்து வந்த இருவருக்கும், கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குளத்தின் நடுவே உள்ள பிரமாண்ட நட்சத்திர விடுதியில் கடந்த 24ஆம் தேதி திருமண விழா நடைபெற்றது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட படகில் வந்த மணமகன் ராகவ் சதாவை பரினீதி சோப்ராவின் குடும்பத்தினர் வரவேற்றனர்.

பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ராவின் கைவண்ணத்தில், மணமக்கள் இருவரும் கண்கவர் உடைகளில் தோற்றமளித்தனர். உறவினர்கள், நண்பர்கள் என முக்கியமான நபர்கள் சூழ திருமணம் அரங்கேறியது. இந்த விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிரியங்கா சோப்ரா பங்கேற்க முடியாத சூழலில், அவரது தாயார் மது சோப்ரா மட்டும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

இந்த நிலையில், திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவுடன் பரினிதி ஒரு பாடலையும் பாடி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான சீரம் எப்படி தேர்வு செய்வது தெரியுமா? 

துப்புரவுப் பணியாளர்களுக்கு துணை நிற்போம்!

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க செய்யக்கூடிய 9 எளிய விஷயங்கள்!

கைவசம் வசம்பு... இனி நோ வம்பு!

பாகுபலி பிரபாஸுக்கு திருமணமா? இன்ஸ்டா ஸ்டோரி வைரல்!

SCROLL FOR NEXT