Madhavan  
வெள்ளித்திரை

அலைபாயுதே 2: மீண்டும் வருமா மற்றுமொரு காதல் பயணம்?

ரா.வ.பாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் எத்தனையோ திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒருசில படங்கள் மட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அதில் காதல் படங்களுக்கென தனி வரிசையே இருக்கிறது. அவ்வகையில் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம் தான் அலைபாயுதே! இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு ரசிகர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

கடந்த 2000 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, மாதவன் மற்றும் ஷாலினி நடித்த திரைப்படம் தான் அலைபாயுதே. திரைக்கு வந்த நாள் முதல் இன்றுவரை இப்படத்திற்கான வரவேற்பு அபரிமிதமாக இருக்கிறது. ஆம், எத்தனையோ காதல் படங்கள் நம்மை உருக வைத்திருந்தாலும், அலைபாயுதே திரைப்படம் என்றென்றும் ஸ்பெஷல் தான். இத்திரைப்படம் வெளிவந்து 24 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இன்றும் இப்படத்தைக் காணும் போது காதல் உணர்வுகள் பிறப்பெடுக்கும்.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. புதிதாக எடுக்கப்படும் படங்கள் இரண்டு பாகங்களாக வெளிவருவதைத் தாண்டி, பழைய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியும் அதிகரித்துள்ளன. சண்டக்கோழி 2, சந்திரமுகி 2 மற்றும் இந்தியன் 2 என சில படங்கள் வெளிவந்தாலும், முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு பெரிதாக இல்லை என்றே சொல்ல வேண்டும். இருப்பினும் அலைபாயுதே இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமீபத்தில் மாதவன் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் சந்தித்த போது புகைப்படம் எடுத்துள்ளனர். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஷாலினி. இதனைக் கண்ட ரசிகர்கள் மீண்டும் உங்கள் காம்போ-வை திரையில் காண விரும்புகிறோம். அலைபாயுதே 2 படத்தை எடுக்க முயற்சி செய்யுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர். அலைபாயுதே படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் மாதவனும், சக்தி கதாபாத்திரத்தில் ஷாலினியும் நடித்திருந்தனர். 24 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் மற்றும் சக்தி சந்தித்ததைக் காணும் போது “அலைபாயுதே வைப்” மீண்டும் வந்துவிட்டதாக ரசிகர் ஒருவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு அலைபாயுதே 2 வருமா என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

காதலுக்கு மரியாதை என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார் ஷாலினி. இப்படத்தின் வெற்றி ஷாலினிக்கு பல வாய்ப்புகளைத் தந்தது. அதன்பின் அஜித்தின் 25வது படமான அமர்க்களம் திரைப்படத்தில் நடித்தார். மேலும் கண்ணுக்குள் நிலவு மற்றும் பிரியாத வரம் வேண்டும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் ஷாலினி.

தற்போது ஷாலினி திரைப்படங்களில் நடிப்பதில்லை. மாதவன் கடைசியாக பாலிவுட்டில் சைத்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அலைபாயுதே 2 படம் வருமா என்பது சந்தேகம் தான். இருப்பினும் இயக்குநர் மணிரத்னம் நினைத்தால் அலைபாயுதே 2 சாத்தியம் தான். தற்போது இவர் கமல் நடிக்கும் தக்லைஃப் படத்தை இயக்கி வருகிறார்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT