Annapoorani OTT
Annapoorani OTT 
வெள்ளித்திரை

அன்னபூரணி படத்திற்கு வந்த சிக்கல்.. ஒடிடி தளத்தில் இருந்து நீக்கம்!

விஜி

ன்னபூரணி படம் ஒடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான நீலேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, கார்த்திக் குமார், குமாரி சச்சு, அச்யுத் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் ட்ரைடண்ட் ஸ்டுடியோஸ் மற்றும் நாட் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளது. சத்யன் சூர்யா ஒளிப்பபதிவு செய்துள்ளார்.

மேலும் பிரவின் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்தப் படம் கடந்த டிச. 1-ம் தேதி வெளியானது. இந்தப் படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியானது.

இந்த படத்தில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் என்ற கதாபாத்திரம், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவது போலவும் அர்ச்சகர் மகளான கதாநாயகி நமாஸ் செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்தப் படம் வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது என்று மும்பையை சேர்ந்த, சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து இப்படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பலரும் இப்படத்தை தடை செய்யவேண்டும் என்று பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில், தற்போது இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தை இணைந்து தயாரித்த ஜீ நிறுவனம் விஷ்வ இந்து பரிஷர் அமைப்பிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. அக்கடிதத்தில் படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை அப்படத்தை நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்குவதாக உறுதியளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டில் வைக்கக்கூடிய விதவிதமான அழகு ஜன்னல்கள்!

ஹெலிகாப்டர் பெற்றோரின் 8 அறிகுறிகள் எவை தெரியுமா?

“தால் பாத்தி சுர்மா” இராஜஸ்தானின் பாரம்பரிய உணவு!

எதிர்மறை எண்ணங்களை விரட்டுவது சுலபமே!

குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித்தர வேண்டிய வெளி பாதுகாப்பு குறிப்புகள்!

SCROLL FOR NEXT