வெள்ளித்திரை

அர்ஜுன் மகளுக்குத் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமோ?

கல்கி டெஸ்க்

80 களின் நாயகன் அர்ஜுன் சார்ஜா. கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் என்ற போதும் இன்று வரை தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இவருக்கென்று தனி இடம் உண்டு. அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள்.மூத்த மகள் ஐஸ்வர்யா, தன் தந்தையைப் பின்பற்றி தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அவரது நடிப்பில் ‘பட்டத்து யானை’, ‘சொல்லி விடவா’ என்று இரண்டு திரைப்படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

அர்ஜுன் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்காக ‘சர்வைவர்’ என்றொரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். அதில் பங்கேற்ற போட்டியாளர்களில் உமாபதி ராமையாவும் ஒருவர். ஐஸ்வர்யாவுக்கும், உமாபதிக்கும் சர்வைவர் ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பு தளத்தில் வைத்து அறிமுகம் நிகழ்ந்திருக்கிறது. உமாபதி, தமிழில் சில திரைப்படங்களில் நாயகனாக நடித்த பின் தற்போது சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா நடிப்பில் ‘ராஜாக்கிளி’ என்றொரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தகவல். உமாபதி ராமையாவும், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவும் டேட்டிங்கில் இருப்பதாகவும் விரைவில் அர்ஜுன் வீட்டில் மங்கல மேளச்சத்தம் கேட்கவிருப்பதாகவும் ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் உலவிக் கொண்டிருந்தது. இதை தற்போது உமாபதியின் தந்தையும், பிரபல நடிகருமான தம்பி ராமையா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

தம்பி ராமையா அளித்த தகவலின் படி, தீவிர ஆஞ்சநேய பக்தரான அர்ஜுன் போரூர் கெருகம்பாக்கத்தில் 28 அடி உயர ஆஞ்சநேயர் சிலையைப் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கும்பாபிஷேகம் முடித்திருந்தர். அங்கு வைத்து தான் மணமகன் வீட்டார், அர்ஜுன் அதாவது மணமகள் வீட்டாரை சந்தித்து அவர்களது திருமணம் குறித்து முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்களாம். விரைவில் திருமணத் தேதியை முடிவு செய்து உமாபதியின் பிறந்த்நாளான நவம்பர் 8 க்குள் அறிவிக்கவிருப்பதாகவும், திருமணம் அடுத்த ஆண்டு தை மாதம் அதாவது ஃபிப்ரவரி 2024 வாக்கில் உறுதி செய்யப்படக்கூடும் என தம்பி ராமையா அச்சு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலொன்றில் பகிர்ந்திருக்கிறார்.

முதிர் பெண்களின் மன அழுத்தம் போக்கும் எளிய வழிகள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாளுக்கு தளிகை செய்வது எப்படி?

வெறும் வயிற்றில் அத்திப்பழ தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 10 நன்மைகள்!

உங்கள் குழந்தைகளுக்கும் இந்த 7 ரகசியங்களைக் கற்றுத் தரலாமே!  

திரைப்பட ஒளிப்பதிவில் மலைக்க வைத்த மந்திர வித்தகர் மாருதிராவ்!

SCROLL FOR NEXT