Arunachalam movie  
வெள்ளித்திரை

ரஜினியை வம்புக்கு இழுத்த சுப்புனி என்ன செய்கிறார் தெரியுமா?

ராகவ்குமார்

1997ம் ஆண்டு ரஜினியின் அருணாசலம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நேரம். இந்த படத்தில் குள்ளமாக ஒருவர் திரையில் தோன்றி ரஜினியை வம்புக்கு இழுப்பார். யாருடா இது சித்ரகோமாளி மாதிரி இருக்கான் நம்ம தலைவரையே கலாய்கிறான் என ரசிகர்கள் வியப்பாக பார்த்தார்கள். ஒரு கட்டதில் ரஜினி இந்த குள்ள மனிதரை அப்படியே அலேக்காக தூக்கி நிறுத்துவார். தியேட்டரே கைத்தட்டி சிரித்தார்கள்.

ஆண்டுகள் பல கடந்தும் ரசிக்கப்படும் இந்த நகைச்சுவைக்கு சொந்தக்காரர்  சுப்பிரமணி என்ற  சுப்புனி. பிப்ரவரி 14 காதலர் தினத்தில் பிறந்த இந்த சுப்புனியை ஒரு பிரபல யூடுயூப் சேனல் தேடி பிடித்து பேட்டி எடுத்துள்ளது. சென்னை மயிலாப்பூர் வாசியான சுப்பிரமணி என்ற  சுப்புனி 1973 முதல்  Y. G. மஹேந்திராவின் நாடக குழுவில் நடித்து வருகிறார்.

Arunachalam movie

இயற்கையாக இவருக்கு அமைந்த குள்ளமான உருவம் நகைச்சுவை செய்ய ஏதுவாக அமைந்தது.பல நாடகங்களில் நடித்து வந்தவர்க்கு YG மஹேந்திரா, சிவாஜி நடித்த பரீட்சைக்கு நேரமாச்சு திரைப்படம் முக்கிய படமாக அமைந்தது. இப்படத்தில் காமெடி ரவுடியாக நடித்திருப்பார் சுப்புனி. பின்னாட்களில் வடிவேலு செய்த நானும் ரவுடி தான் நகைச்சுவைக்கு முன்னோடி நம்ம சுப்புனிதான் என சொல்லலாம்.

ரவுடி போல சீன் போட்டு மொக்கை வாங்கி கொண்டு போவார் நம்ம சுப்புனி. பல மேடை நாடகங்கள், சில திரைப்படங்கள் நடித்த சுப்புனிக்கு அருணாசலம் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வரவில்லை. வந்த சில வாய்ப்புகளையும் தனக்கு ஒத்து வராது என்று தவிர் த்து இருக்கிறார். இவர் உருவம் தான் சிறிது மனம் மிக பெரிது என்பது இவர் தந்த இந்த நேர்காணலில் தெரிகிறது.

Arunachalam movie

"இருப்பதை கொண்டு சந்தோசபடுங்க பெருசா ஆசை படாதீங்க என்று ஒரு DON'T WORRY BE HAPPY... ரேஞ்சுக்கு அட்வைஸ் தருகிறார் சுப்புனி.  என்னதான் பரோட்டா, சப்பாத்தின்னு வெளியில் சாப்பிடா கூட வீட்டில் வந்து தயிர் சாதம் சாப்பிடுவதற்கு ஈடாகுமா என நாக்கு ஊற பேசுகிறார்.

Arunachalam movie

நாடகம், தொலைகாட்சி தொடர், என பலவேறு தளங்களில் முத்திரை பதித்த சுப்புனிக்கு சரியான இடம் தமிழ் சினிமா தரவில்லை என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT