Arya 34 
வெள்ளித்திரை

பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவம் தரும் ‘ஆர்யா34’ !

லதானந்த்

நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஆர்யா34’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்குகிறார்.

ஜீ ஸ்டூடியோஸ் & டிரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ‘ஆர்யா 34’ படத்தைத் தயாரிக்கின்றன. டெடி, சார்பட்டா பரம்பரை மற்றும் கேப்டன் என மாறுப்பட்ட படங்களைத் தந்து வரும் நடிகர் ஆர்யா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் உடன் இணைந்தது குறித்து ஜீ ஸ்டுடியோவின் சவுத் மூவிஸ் தலைவர் அக்ஷய் கெஜ்ரிவால் கூறுகையில், “இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் எங்களது அடுத்த திரைப்படத்தில் ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆர்யா தொடர்ந்து மாறுபட்ட பாத்திரங்களில் வித்தியாசமான படங்கள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இயக்குநர் முத்தையா அனைத்துத் தரப்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்து கொண்டவர்.

இவர்கள் கூட்டணி பார்வையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்தை வழங்கும் என்பது உறுதி. சிறந்த உள்ளடக்கங்கள் கொண்ட, பல அற்புதமான படங்களை வழங்கிய ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது. பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை தரும், நல்ல படைப்பை வழங்குவோம் என்று நம்புகிறோம்” என்றார்.

இயக்குநர் முத்தையா இப்படத்தினை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.

அதிகப்படியான ஆயில் சருமத்தை கட்டுப்படுத்த சில தீர்வுகள்!

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம். மாற்றி யோசிப்போமா நண்பர்களே!

சிவனின் அம்சமான முனீஸ்வரன் பற்றித் தெரியுமா?

இலக்கை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

SCROLL FOR NEXT