“பிரிட்டிஷ் அகாடமி ஆப் ஃபிலிம் அன்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ்” (British Academy of Film and Television Arts) இதனைதான் சுருக்கமாக BAFTA விருதுகள் என அழைக்கிறோம். இது ஒரு வருடாந்திர விருது வழங்கும் நிகழ்ச்சியாகும்.
முதல் BAFTA விருதுகள் விழா 1949 இல் நடைபெற்றது. 1956 இல் முதன்முதலில் பிபிசியில் விவியன் லீயை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகக் கொண்டு ஒளிபரப் பப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவானது தொடக்கத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்பட்டது. பின்னர் 2001 முதல், பொதுவாக பிப்ரவரியில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பெறுநர்களுக்கு வழங்கப்படும் விருதானது ஒரு நாடக முகமூடியை சித்தரிக்கிறது.
BAFTA வின் நோக்கமே "சிறப்புகளைக் கண்டறிந்து வெகுமதி அளிப்பது, பயிற்சியாளர்களை ஊக்குவிப்பது மற்றும் பொதுமக்களுக்கு நன்மை அளிக்கும் நகரும் படத்தின் (Motion pictures) கலை வடிவங்களை ஆதரிப்பது மற்றும் மேம்படுத்துவது" ஆகும். உயர்தர விருது வழங்கும் விழாக்கள் மட்டுமின்றி கூடுதலாக, BAFTA ஆண்டு முழுவதும் கல்வி நிகழ்வுகளையும் நடத்திவருகிறது. திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம் தொழில்களில் இருந்து சுமார் 6,000 பேர் உறுப்பினர்களாக இருந்து BAFTAவால் ஆதரிக்கப்பட்டு வருகின்றனர்.
BAFTA விருதுகள் 2024:
சிறந்த தேசிய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் BAFTA எனப்படும் விருதானது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 77வது BAFTA விருது வழங்கும் விழா லண்டன் சவுத்பேங்க் சென்டரில் உள்ள ராயல் ‘ஃபெஸ்டிவல் ஹாலில்’ நடைபெற்றது.
இந்த விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியல் கடந்த மாதம் ஜனவரி 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுகளை வென்ற படங்கள்:
விருது வழங்கும் நிகழ்ச்சியில் பல திரைப்படங்களும் ஒவ்வொரு விதமான பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்று வெற்றி வாகையைச் சூடியது. இந்நிலையில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஓப்பன்ஹைமர்’ படம் ஏழு பிரிவுகளிலும், ‘புவர் திங்ஸ்’ திரைப்படம் ஐந்து பிரிவுகளிலும் விருதுகளைத் தட்டியுள்ளன. விருதுகளை வென்ற திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு..
· சிறந்த படம் - ஓப்பன்ஹைமர் (Oppenheimer)
· சிறந்த நடிகர்: சில்லியன் மர்ஃபி (Oppenheimer)
· சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (Poor things)
· சிறந்த துணை நடிகர்: ராபர்ட் டவ்னி (Oppenheimer)
· சிறந்த துணை நடிகை: டாவின் ஜாய் ரேண்டால்ஃப் (The Holdovers)
· சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோஃபர் நோலன் (Oppenheimer)
· சிறந்த தயாரிப்பு: புவர் திங்ஸ் (Poor things)
· சிறந்த ஒலிப்பதிவு: 'தி சோன் ஆஃப் இன்ரஸ்ட்' (The Zone of Interest)
· சிறந்த ஒளிப்பதிவு: ஓப்பன்ஹைமர் (Oppenheimer)
· சிறந்த படத்தொகுப்பு: ஓப்பன்ஹைமர் (Oppenheimer)
· சிறந்த இசை (ஒரிஜினல்): ஓப்பன்ஹைமர் (Oppenheimer)
· ரைசிங் ஸ்டார் விருது (பொதுமக்களால் தேர்வு) : மியா மெக்கன்னா (Bruce)
· சிறந்த ஆடை வடிவமைப்பு: ஹோலி வாடிங்டன் (Poor things)
· சிறந்த மேக்கப் & சிகையலங்காரம்: நாடியா ஸ்டேசி, மார்க் கூலியர், ஜோஸ் வெஸ்டர் (Poor things)
· சிறந்த ஆங்கில திரைப்படம்: 'தி சோன் ஆஃப் இன்ரஸ்ட்' (The Zone of Interest)
· சிறந்த ஆங்கில குறும்படம் (அனிமேஷன்): ‘கிராப் டே’ (Crab Day)
· சிறந்த ஆங்கில குறும்படம்: ‘ஜெல்லி ஃபிஷ் அண்ட் லேப் ஸ்டார்’ (Jellyfish and lobster star)
· சிறந்த ஆவணப்படம்: ‘20 டேஸ் இன் மறியுபோல்’ (20 days in Mariupol)
· சிறந்த திரைக்கதை (தழுவல்): ‘அமெரிக்கன் ஃபிக்ஷன்’ (American Fiction)
· சிறந்த படக்குழு: ‘தி ஹோல்டோவர்ஸ்’ (The Holdovers)
· ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படம்: : 'தி சோன் ஆஃப் இன்ரஸ்ட்' (The Zone of Interest)
· சிறந்த அறிமுக எழுத்தாளர், இயக்குநர் அல்லது தயாரிப்பாளருக்கான விருது: ‘எர்த் மாமா’ (Earth Mama)
· சிறந்த அனிமேஷன் படம்: ‘தி பாய் அண்ட் ஹீரோன்’ (The Boy and the Heron)
· சிறந்த விஷூவல் எஃபக்ட்: ‘புவர் திங்ஸ்’ (Poor things)
· சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): அனாடமி ஆஃப் ஃபால் (Anatomy of a Fall).