Goundamani with Bharathiraja 
வெள்ளித்திரை

ஆளும் மூஞ்சியும் சரியே இல்ல – கவுண்டமணி குறித்து பாரதிராஜா சொன்ன வார்த்தைகள்!

பாரதி

கவுண்டமணியை பாரதிராஜா ஒருமுறை ஆளும் மூஞ்சியும் சரி இல்ல என்று சொல்லி வாய்ப்புத் தர மறுத்தது குறித்து பாக்யராஜ் பேசியதைப் பார்ப்போம்.

கவுண்டமணி செந்தில் காம்போ ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தது. குணச்சித்திர நடிகராக, காமெடியனாக கலக்கியவர் கவுண்டமணி. பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த இவர், தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால், மிகவும் ஸ்லோவாக படபிடிப்பு நடந்து வருகிறது. மீண்டும் இவர் காமெடியனாக களமிறங்குவதும் கஷ்டம்தான். ஏனெனில், வடிவேலுக்கு முன்பே மிகவும் புகழ்பெற்றவர் கவுண்டமணி. இப்போது வடிவேலுக்கே அவ்வளவாக படங்கள் இல்லை. மாமன்னன் படத்தை அடுத்துதான் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதுவும் தந்தை போன்ற கதாபாத்திரங்களில்தான் அவருக்கு செட்டாகிறது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில், கவுண்டமணிக்கு வாய்ப்பு கேட்டு பாக்கியராஜ் பாரதிராஜாவிடம் சென்றது, அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்பதைப் பார்ப்போம்.

சர்வர் சுந்தரம் படத்திற்கு பிறகு ஒரு நல்ல பட வாய்ப்பு கிடைக்காதா என்று கவுண்டமணி வருத்தப்பட்டார். அப்போது கவுண்டமணி தனது ஊர் பக்கம் என்பதால், 16 வயதினிலே படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தரலாம் என்று எண்ணினார் பாக்யராஜ். அப்போது ஆளும் மூஞ்சியும் சரியில்ல, வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் பாரதிராஜா. ஆனால், பாக்யராஜ் ஒற்றைக்காலில் நின்று பாரதிராஜாவிடம் வாய்ப்பு வாங்கிக் கொடுத்துவிட்டாராம்.

படம் வெளியான பிறகு ரஜினி கவுண்டமணி நடித்த காட்சிகள் பட்டையை கிளப்ப, பட்டித் தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், பாரதிராஜா அடுத்தடுத்தப் படங்களில் யாருடைய ஆலோசனையும் கேட்காமல் கவுண்டமணியை நடிக்க வைத்தாராம். கவுண்டமணியை தேடி ஏராளமான இயக்குநர்கள் சென்றிருந்தாலும், ஒருகாலத்தில் அவரும் இயக்குநருக்காக காத்திருந்த காலமும் உண்டு.

இந்த தகவலை பாக்யராஜ் ஒருமுறை பகிர்ந்திருக்கிறார்.

 நடிகர் செந்திலை அறிமுகப்படுத்தியதும் பாக்யராஜ்தான். செந்திலையும் பலர் உருவக்கேலி செய்து ஒதுக்கி வந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக பாக்யராஜ் செந்திலுக்கு வாய்ப்புக் கொடுத்து அறிமுகப்படுத்தினார். ஒருகாலத்தில் எந்த இருவருடைய மூஞ்சியை கேலி செய்தனரோ, அவர்களே பிற்காலத்தில் இணைந்து பிரபலமாகினர். அதற்கு பாக்யராஜ் மட்டுமே காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT