Bloody Beggar and Brother movie review 
வெள்ளித்திரை

2 In 1 விமர்சனம் - ப்ளடி பெக்கர் & பிரதர் - அடுத்தடுத்து இரண்டு படம்; இரண்டும் தீபாவளி புஸ்ஸ்ஸ்..!

ராகவ்குமார்

தீபாவளிக்கு  வேட்டு வெடிச்சு, பலகாரம் சாப்பிட்டு முடிச்ச உடனே என்ன செய்யலாம்னு யோசனை வந்தது. எப்.எம் ரேடியோவில் சில தீபாவளி படங்களுக்கு விளம்பரம் பண்ணிகிட்டு இருந்தாங்க. சரின்னு தியேட்டர் பக்கம் போனேன். போனேனா...?

கவின் நடிச்ச பளடி பெக்கர், ஜெயம் ரவி நடிச்ச பிரதர் படம் ஓடிக்கிட்டு இருந்தது.

கவின் ஏதோ வித்யாசமமாக கெட்டப்புல இருக்காரே, முதலில் இந்த படத்தை பார்த்துருவோம்ன்னு டிக்கெட் வாங்கி உள்ள போனேன் ... போனேனா...?

டைரக்டர் நெல்சன் இந்த படத்தை தயாரிச்சு தன்கிட்ட அசிஸ்டன்ட்டா இருந்த சிவபாலன் முத்து குமாரை டைரக்டர் ஆக்கியிருக்காரு. முதல் காட்சியில் ஒரு பெரிய பங்களா. நாலு பசங்க சேர்ந்து ஒரு சின்ன பையனை டார்சார் செய்றாங்க. கட் பண்ணா, நம்ம ஹீரோ கவின் பிச்சை எடுக்குறாரு! Bloody Beggar வந்துட்டாரு! ஒரு பெரிய பங்களாவில் சாப்பிட போய் அங்க தெரியாம மாட்டிக்கிறாரு. அங்க இருக்கறவங்க அவர செத்து போன ஒருத்தரோட வாரிசாக நடிக்க சொல்றாங்க. இதுல வரும் குளறுபடியில் அவர கொலை செய்ய முயற்சி செய்றாங்க. இதுல அவர் தப்பிக்கிறதுதான் கதை.

பணக்காரன் கெட்டவன். ஏழை நல்லவன்ற கதையை வெச்சு படம் எடுத்துருக்காரு. எடுத்ததெல்லாம் ஒகே. ஆனா நல்லா பார்க்கற மாதிரி எடுக்க வேண்டாமா?

ஒருத்தர் மனித குரங்கு மாதிரி, பேய் மாதிரி, பொண்ணு மாதிரி நடிக்கிறார். இந்த நடிப்பை பார்க்கறதுக்கே ஒரு அசாத்திய பொறுமை வேணும்!! கிங்ஸ்லி நகைச்சுவைன்ற பெயர்ல காட்டு கத்தல் கத்துறாரு. நிறைய நடிகர்கள் நடிச்சிருக்காங்க. இவங்க எக்ஸ்பிரஷனை டைட் கிளோஸ் அப்ல பார்த்தா பயமா வேற இருக்கு.

ராதா ரவி கேரக்டர் தேவையில்லாம திணிக்கப்பட்டது போல இருந்தாலும், அவர் நடிப்பு நல்லாவே இருக்கு (பின்ன சீனியர் ஆச்சே...சும்மாவா!).

படம் ப்ரோமோஷன் செய்த நாள் முதல் ஹீரோ கவின் நடிப்பு மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. சும்மா சொல்லக் கூடாது தம்பி ஓரளவு ஓகே. பிளாஷ் பேக் காட்சியில் இன்னும் சிறப்பாக இருந்தது.

அடுத்து, ராஜேஷ் M. டைரக்ஷன்ல ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பிரதர் படத்தை பார்க்க போனேன். போனேனா...? தப்பு என்னதுதான்! இப்படி அடுத்தடுத்து இரண்டு சினிமா பாக்கணும்னு தோணிச்சு பாருங்க ... என்ன சொல்லணும்.

ஊருக்கு அடங்காத பையனை (ஜெயம் ரவி) மகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாரு அப்பா அச்சுத் குமார். அங்க ஏக்கப்பட்ட பிரச்சனைகள். கூடவே நமக்குந்தான்!

இந்த பிரதர் பிரச்சனைகளை எப்படி தீர்க்கறாருன்றதுதான் கதை. படம் பார்க்கும் போது எம் ஜி ஆர், ரஜினி, விஜய் இன்னும் பல ஹீரோக்கள் நடித்த படங்களின் காட்சிகள் மனதில் தோன்றி பிரதர் படத்தை பார்க்கறதை மறக்கடிக்க செய்யுது என்பது வேண்ணா ஓரளவு காப்பாத்துது!

யதார்த்தமா நடிக்கற சரண்யா பொன் வண்ணனை செயற்கையா நடிக்க வெச்ச பெருமை நம்ம ராஜேஸையே சாரும். ஜெயம் ரவி, பிரியங்காவின் நடிப்பெல்லாம் பெருசா எதுவும் இல்லை. பூமிகா ஒகே. ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்ல இரண்டு பாட்டு.... கேட்கும் படியா இருக்கு. இந்த படத்தை ஓரளவு பார்க்கும் படி செய்றது VTV கணேஷ் செய்யும் அட்ரா சிட்டி காமெடிதான்.

அடுத்தடுத்து இரண்டு படம்.... never again this mistake ...

இரண்டுக்கும் என்ன ரேட்டிங் தரலாம்...? 2.5 ?????mr

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT