Director Atlee 
வெள்ளித்திரை

அட்லீயுடன் கைகோர்க்கும் பாலிவுட் மற்றும் கோலிவுட் ஸ்டார்கள்!

ரா.வ.பாலகிருஷ்ணன்

பான் இந்தியா படங்களின் வருகைக்குப் பிறகு மல்டி ஸ்டார் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. அவ்வகையில் தற்போது இயக்குநர் அட்லீ பாலிவுட் மற்றும் கோலிவுட்டின் மெகா ஸ்டார்களை இணைத்து படம் இயக்கவுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அட்லீ. அதற்குப் பிறகு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா நடித்த இத்திரைப்படம் மெகா ஹிட் வெற்றியைப் பெற்றது. பொதுவாக முதல் படம் வெற்றி அடைந்தாலும், அடுத்த படத்திற்கான வாய்ப்பு என்பது பல இயக்குநர்களுக்கு எட்டாக்கனியாகத் தான் இருக்கும். ஆனால், அட்லீக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பு சிறிது காலத்திலேயே கிடைத்து விட்டது. அதுவும் இளைய தளபதி விஜ்ய்யை இயக்கும் வாய்ப்பு. ஆம், தெறி என்ற படத்தில் விஜய்யை இயக்கி வெற்றியும் கண்டார் அட்லீ.

தெறி படத்தின் வெற்றிக்குப் பிறகு மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களையும் இயக்கி தளபதிக்கு ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தார் அட்லீ. தளபதி கொடுத்த மூன்று வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அட்லீக்கு அடுத்த வாய்ப்பு பாலிவுட் பக்கம் கிடைத்தது. பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் தாமாகவே முன்வந்து, அட்லீயிடம் எனக்கு ஒரு படம் இயக்குங்கள் என்று அழைப்பு விடுத்தார். கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை எடுத்து முடித்தார். இப்படத்தில் நாயகியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் உலக அளவில் சுமார் ரூ.1,200 கோடியை வசூலித்து சாதனைப் படைத்தது.

தமிழ் சினிமாவைச் சேர்ந்த ஒரு இயக்குநரின் அதிகபட்ச வசூலே ஜவான் திரைப்படம் தான். தொடர்ந்து 5 வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகு, தற்போது மீண்டும் பாலிவுட் நடிகரை இயக்கவுள்ளார் அட்லீ. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், தமிழ் சினிமாவைச் சேர்ந்த ஒரு மாஸ் நடிகரும் இதில் இணைகிறார். இதன்படி பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் ஒரே படத்தில் இணைத்து இயக்கப் போகிறார் அட்லீ.

Salman Kamal

இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க இருக்கிறது. தமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. ஜவான் படத்திற்கு இசையமைத்த அனிருத் தான் இப்படத்திற்கும் இசையமைக்க உள்ளார். இளம் இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் கமல்ஹாசன் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மற்றும் நாக் அஸ்வின் இயக்கிய கல்கி 2898 AD போன்ற பான் இந்தியா படங்களில் நடித்தார். இவ்விரு படங்களும் வெற்றிப் படமாக அமையவே மீண்டும் ஒரு பான் இந்தியப் படத்தில் கமல் நடிக்கவிருப்பது அவரது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் சீனாவைப் போல இந்தியா வளர்ச்சி அடையவில்லை தெரியுமா? 

கோயில்கள் செய்த கின்னஸ் சாதனைகள் தெரியுமா?

வயதான தோற்றத்தை துரிதப்படுத்தும் 10 வகை உணவுகள்!

இது பன்றியா? ஆடா?... ஒரே குழப்பமா இருக்கே! 

வாகன ஓட்டிகளுக்கான மழை கால எச்சரிக்கை!

SCROLL FOR NEXT