Captain Miller 
வெள்ளித்திரை

கேப்டன் மில்லர் படத்துக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரம்... என்ன தெரியுமா?

விஜி

தனுஷ் நடிப்பில் பல சர்ச்சைகளை தாண்டி பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கி உள்ளார். கிராமத்தில் உள்ள ஜாதி கொடுமைகளை வெறுத்து ஆங்கிலேய ராணுவத்தில் சேருகிறார் தனுஷ்.பிரிட்டிஷ் ராணுவம் தனது மக்களையே தன்னை வைத்து கொல்ல வைப்பதை பார்த்து வெறுப்படையும் தனுஷ் போராளியாக மாறி ஆங்கிலேய அரசை எதிர்க்கிறார். இதனால் ஜமீன்தாரும், பிரிட்டிஷ் அரசும் தனுஸை ஒழிக்க நினைக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்பதுதான் கதை.

எத்தனை குண்டுகள் பாய்ந்தாலும் ஹீரோ மீது ஒரு குண்டு கூட விழாமல் தப்பிப்பது, ஹீரோ அனைவரையும் அடித்து வீழ்த்துவது என பல மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகளை பஞ்சமில்லாமல் வைத்துள்ளார் அருண் மாதேஷ்வரன். சுதந்திரத்திற்கு முந்தையை இந்தியா, பிரிட்டிஷ் என சில பிளேவர்களை தூவி உள்ளார்.

சிவராஜ் குமார் - தனுஷ் நடிக்கும் காட்சி, இந்தியர்களை சுட்டு கொல்லும் காட்சி போன்ற சில காட்சிகள் நன்றாக படாமக்க பட்டுள்ளன. ஜி.வி பிரகாஷ் பழங்குடியினர் இசையை பல இடங்களில் பயன்படுத்தியுளளார். இந்த படம் வெளியான முதல் வாரத்திலேயே, உலகம் முழுக்க 14 நாடுகளில் டாப் 5 வரிசையில் இப்படம் இடம் பிடித்து சாதனை படைத்தது. மேலும் இந்தியா உட்பட 9 நாடுகளில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது. வெளிநாடுகளில் லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிட்டது. கேப்டன் மில்லர் திரைப்படம் தமிழ் மொழியில் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளிலும் நல்ல விமர்சனத்தை பெற்றது.

இந்தியா மட்டுமல்லாது, தான்சேனியா போன்ற ஆப்ரிக்க நாடுகளிலும் மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளிலும் பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், போன்ற நாடுகளிலும் தொடர்ந்து முதல் 5 இடங்களில் டிரெண்டிங்கில் இருந்து வந்தது.

இப்படி பல சாதனைகளை படைத்த இந்த படம் தற்போது மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. தற்போது இந்த திரைப்படம் இங்கிலாந்து தேசிய திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT