குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து முகத்தில் அறைந்தாற் போல் பேசும் படைப்பாக வெளியாகியிருக்கிறது இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் மற்றும் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சித்தா’ திரைப்படம்.
சமீபகாலமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு படங்கள் வெளிவரத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு சாய்பல்லவி நடிப்பில் வெளியாக கார்கி திரைப்படம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சித்தா படமும் அந்த வரிசையில் இடம்பெற்றது.
இந்நிலையில் சித்தா படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அதில்,”இந்த சமூகம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு படம் தான் இந்த சித்தா. ஆண், பெண் என்றில்லாமல் பொதுவாக குழந்தைகள் மீதான வன்முறையை மிக அழுத்தமாக இப்படம் சொல்லியிருக்கிறது. அதேபோல், படத்தில் குழந்தைகள் மீதான வன்முறைகளை காட்சிகள் இல்லாமலையே அந்த வன்முறையை வசனங்கள் வாயிலான கடத்தியுள்ளார் இயக்குநர். பலருக்கு மகாநதி படம் பிடித்திருக்கும். ஆனால், எனக்கு இன்ஷ்பிரேசன் படம் என்றால் அது சித்தா படம்தான” என பாராட்டியுள்ளார்.
அதேபோல், அமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ள கருத்தில், ”பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் காண வேண்டிய சமூக பொறுப்புள்ள திரைப்படைப்பாக 'சித்தா' திரைப்படம் வெளியாகியுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து உரக்கப் பேசுவது மட்டுமன்றி, அத்தகைய கொடுமைகளை களைவதற்கான தீர்வையும் இப்படம் முன் வைக்கிறது. சித்தா படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்.