வெள்ளித்திரை

ட்ரெண்டாகி வரும் Dhoom4 படம்... யார் நடிக்கப் போகிறார்கள் தெரியுமா?

பாரதி

Dhoom படத்தின் பாகம் 1, 2, 3 ஆகிய படங்கள் பாலிவுட்டில் பெரிய ஹிட்களைக் கொடுத்த படங்கள். அந்த வகையில் இதனுடைய அடுத்த பாகத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்ற செய்தி சினிமா வட்டாரத்திலிருந்து கசிந்து இப்போது X தளத்திலும் ட்ரெண்டாகி வருகிறது.

தூம் பாகம் 1 யாஷ் ராஜ் நிறுவனத்தின் தயாரிப்பில் சஞ்சை காந்த்வி இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் உதய் சோப்ரா நடித்தார்கள். அதேபோல் பாகம் 2 அதே இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டனியில் 2006ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ரித்திக் ரோஷன் மற்றும் ஐஷ்வர்யா ராய் ஆகியோர் நடித்தார்கள். தூம் 3 2013ம் ஆண்டு யாஷ் ராஜ் தயாரிப்பில் விஜய் cகிருஷ்னா ஆச்சார்யா இயக்கத்தில் வெளியானது. இப்படத்தில் கத்ரீனா கைஃப் மற்றும் அமீர் கான் நடித்தனர்.

இந்நிலையில் Dhoom4 படத்தின் புதிய தகவல் வெளியானது. விஜய் கிருஷ்னா ஆச்சர்யாதான் இப்படத்தையும் இயக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஷாருக்கான் மற்றும் ராம் சரண் ஆகியோர் கதாநாயன்களாக நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

2023ம் ஆண்டு ஷாருக்கானுக்கு ப்ளாக்பஸ்டர் ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் ஜவான், பதான் மற்றும் துன்கி ஆகிய மூன்று படங்கள் ஷாருக்கான் நடித்து ஹிட் கொடுத்தப் படங்கள். அடுத்த ஆண்டும் ஷாருக்கானுக்கு ஒரு ப்ளாக்பஸ்டர் ஆண்டாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஒரு தொடக்கம் தான் Dhoom4 அப்டேட்.

அதேபோல் சமீபத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியானப் படம் RRR, பெரிய ஹிட் கொடுத்தது. உலகளவில் ‘நாட்டு நாட்டு’ பாடலின் மூலம் நடனம் மூலம் பிரபலமானார் ராம் சரண். இந்த படத்தில் ராம் சரண் ஒரு போலிஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல் தூம் 4 படத்திலும் ஒரு போலிஸ் கதாப்பாத்திரத்திற்குதான் அவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

முன்னதாக தூம் 4 படத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இப்போது இந்த தகவல் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. மேலும் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் இணைந்து Tiger vs pathaan படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அடுத்த வருடம் பாலிவுட்டில் தொடர்ந்து ப்ளாக்பஸ்டர் படங்கள் வெளியாகும் என்பதில் சந்தேகமேயில்லை.

புகைப்பழக்கத்தை விட்டதும் இதய ஆரோக்கியம் சீராக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

மருதாணியில் மறைந்திருக்கும் மருத்துவ உண்மைகள்!

நட்பின் கதவைத் திறக்கும் மந்திரச் சொல் பழக்கத்தில் வந்தது எப்படி? எப்போது?

சிறுகதை: கணவன்மார்களும்…காத்திருப்போர் சங்கமும்!

ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கும் இது மட்டும் போதுமே....

SCROLL FOR NEXT