அப்பாவின் இறுதி காரியத்திற்கு பணம் இல்லாமல் இயக்குநர் அகத்தியன் தனது சொந்த கதையை விற்க முயன்றிருக்கிறார். அப்போது இயக்குநர் ஒருவர் அவருக்கு உதவிய கதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
1990 களில் முன்னணி இயக்குநராக வலம் வந்த அகத்தியன் வாழ்வில் பல கஷ்டங்களை சந்தித்திருக்கிறார். ஒரு இயக்குநராக, எழுத்தாளராக, நடிகராக வலம் வந்த இவர் ஒரு படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். இவர் கோகுலத்தில் சீதை, காதல் கவிதை, காதல் கோட்டை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவர் பல பாடல்களை எழுதியும் உள்ளார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், காதல் கோட்டை படம் அவருக்கு பல விருதுகளை வாங்கித் தந்தது.
சிறந்த இயக்குநர், திரைக்கதை, தமிழ் சினிமாவின் சிறந்த படம் என மூன்று பிரிவில், தேசிய விருது வாங்கியது இப்படம். தென்னிந்திய ஃபில்ம் ஃபேர் விருதிலும் சிறந்த இயக்குநர் என்ற விருதை பெற்றது. அதேபோல் தமிழ்நாடு விருதிலும் சிறந்த இயக்குநர் விருது பெற்றது இந்தப்படம்.
இப்படி பல விருதுகளை வாங்கித் தந்த இப்படத்தின் கதையைதான் வீட்டு சூழ்நிலையால் விற்க முயன்றிருக்கிறார் இயக்குநர் அகத்தியன்.
இயக்குநர் அகத்தியனின் தந்தை உயிரிழந்த சமயத்தில் வீட்டு சூழல் சரியில்லை. அப்போது அவருக்கு காரியம் செய்யக்கூட பணம் இல்லாத சமயத்தில், அவர் கையில் இருந்தது காதல் கோட்டை படத்தின் கதைதான். இந்தக் கதையை வெரும் 1500 ரூபாய்க்கு விற்க முடிவெடுத்திருக்கிறார் அகத்தியன். பின், இயக்குநர் மணிவண்ணன், “ உன் கதையை நீயே வைத்துக்கொள். இந்தாப்பிடி பணத்தை. ஊருக்குப் போய் அப்பாவிற்கு நல்ல படியா காரியம் பண்ணு” என்று கொடுத்திருக்கிறார்.
பின்னர் அந்தப் படத்தை இயக்கினார் அகத்தியன். அந்தப் படமும் பல விருதுகளை வாங்கித் தந்தது.
பொதுவாக கூறுவார்கள், உடன் இருப்பவர்கள் நல்லவர்களாக இருந்தார்கள் என்றால், நல்லதே நடக்கும் என்று. அதற்கு உதாரணம் இதுவே.
காதல் கோட்டைப் படத்திற்காக அகத்தியனை எப்படி பாராட்டுகிறோமோ? அதேபோல் இயக்குநர் மணிவண்ணனையும் பாராட்டியே ஆக வேண்டும்.