புதுப்பேட்டை
புதுப்பேட்டை  
வெள்ளித்திரை

புதுப்பேட்டை 2 அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. குஷியில் ரசிகர்கள்!

விஜி

புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் கொடுத்த செல்வராகவனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ஹிட்டாகி வருகின்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் தனுஷின் அடுத்தடுத்த படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் கூட திருப்பதியில் அவர் பிச்சைக்காரர் கோலத்தில் இருந்த புகைப்படம் வைரலானது. இப்படி இடைவிடாமல் கமிட்டாகி வரும் தனுஷின் கல்ட் கிளாசிக் படம் ஒன்றின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்து வருகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற தனுஷின் 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் செல்வராகவன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் எத்தனையோ கேங்ஸ்டர் படம் வந்திருந்தாலும் 'புதுப்பேட்டை' படம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், எப்படியாவது இந்தாண்டு 'புதுப்பேட்டை 2' படத்தினை இயக்கியே தீருவேன் என பதிவிட்டுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ஆனால் ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தினை தனுஷை வைத்து இயக்க போவதாக செல்வராகவன் சில ஆண்டுகளுக்கு முன்பாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT