Tabu and Dune 
வெள்ளித்திரை

Dune: Prophecy ஹாலிவுட் தொடரில் கம்மிட்டான தபு!

பாரதி

டூன் படம் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, அதன் காட்சிகள் ஆச்சர்யமூட்டும் வகையில் இருந்தன. அந்தவகையில் அந்தத் திரைப்படத்தை Dune: Prophecy என்ற தொடராக எடுக்கத் திட்டமிட்டனர். தற்போது அந்தத் தொடரில் பிரபல பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தபு. அவர் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். மேலும் தபு இருவர், காதல் தேசம் என தமிழில் சில படங்கள் நடித்து கோலிவுட்டில் நீங்கா இடம்பிடித்தார். பாலிவுட் நடிகையான இவர் அதிகப்படியான ஹிந்திப் படங்களில் நடித்தாலும், அவ்வப்போது மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் நடித்து வந்தார்.

இவர் ஒரு திறமையான நடிகையாகவே இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் க்ரூ என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில், கரீனா கபூர், கிருதி சனோன் ஆகியோரும் நடித்திருந்தனர். இப்படம் பாலிவுட்டில் செம்ம ஹிட்டானது என்றே கூற வேண்டும்.

தற்போது அவர் ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் கம்மிட்டாகி உள்ளார். இந்தியாவிலிருந்து வெகு சிலருக்கு மட்டுமே ஹாலிவுட் சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிட்டும். அந்தவகையில், தபுவிற்கு டூன் படத்தின் ப்ரிக்வலாகக் கருதப்படும் ஒரு சீரிஸில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. டூன் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே உலகெங்கிலும் பெரிய அளவில் எதிர்பார்ப்புக் கூடியது. டூன் படத்தை எடுக்கும் திட்டம் பல ஆண்டு காலமாகவே ஹாலிவுட்டில் நடந்து வருகிறது.

ஆனால், அதனை முழுமையாக எடுத்து வெளியிட்டது 2021ம் ஆண்டுதான். பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான டூன் படம் எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாகவே ரசிகர்களை பூர்த்தி செய்தது. இதனால் படத்தின் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு இன்னும் கூடியது. அந்தவகையில் படத்தின் பாகம் 2 இந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் வசூல் ரீதியாகவும் சாதனைப் படைத்தது.

தற்போது 2021ம் ஆண்டு வெளியான டூன் படத்தைத் தொடராக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். டூன்: புரோபசி என்று பெயரிட்ட அந்தத் தொடரின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார்.

இது இந்திய ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் தள்ளியுள்ளது என்றே கூற வேண்டும்.

பிக்கி உண்டியலின் வரலாறு தெரியுமா?

வேகமாகச் சுழலும் இறந்த நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

இன்சுலின் சுரப்பை இயற்கையாக சீராக்க உதவும் எளிய உணவுகள்!

உடலில் மருக்கள் இருந்தால் சாதாரணமாக நினைக்காதீங்க… ஜாக்கிரதை! 

கனக விநாயகர் கணக்கு விநாயகர் ஆன கதை தெரியுமா?

SCROLL FOR NEXT