எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்
எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் 
வெள்ளித்திரை

விஜய்யின் கோட் படத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. வெளியான போட்டோ!

விஜி

எதிர்நீச்சல் சீரியல் நடிகை விஜய்யின் கோட் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

சன் டிவியில் டாப் 5 சீரியல்களில் இடம்பெற்றுள்ள சீரியல் தான் எதிர்நீச்சல். பெண்கள் சுதந்திரம் குறித்து பேசப்படும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதில் வரும் 4 மருமகள்களும் நடிப்பில் அசத்தியிருப்பார்கள்.

அதில் ஒருவர் தான் மூத்த மருமகள் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கனிகா. இவர் அஜித், மாதவன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படம் நடித்து அசத்தியுள்ளார். தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் விஜய்யின் கோட் படத்தில் நடிக்கவிருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகை

இதுவரை இந்த படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சீரியல் நடிகை கனிகாவும் இந்த படத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் வெங்கட் பிரபுவுடன் நடிகை கனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

குழந்தைகளின் தனித்திறமையை வளர்த்தெடுப்பது எப்படி?

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

SCROLL FOR NEXT