Ramba 
வெள்ளித்திரை

இப்போது வரும் படங்களை என் பிள்ளைகள் கூட பார்க்கமாட்டார்கள் – ரம்பா!

பாரதி

நடிகை ரம்பா இப்போது வரும் படங்களில் நடிக்காதது குறித்து பேசியுள்ளார். அதாவது இப்போது வரும் படங்களின் கதை என் பிள்ளைகளுக்கு கூட பிடிக்காது என்று கூறியிருக்கிறார்.

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் ரம்பா. இவர் நடிகர் கார்த்தி முதல் விஜய் வரை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார். 1992ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவர், 2010 வரை படங்களில் நடித்தார்

நடிகை ரம்பா தமிழில் காதலா காதலா, விஐபி, அருணாச்சலம், த்ரீ ரோசஸ், குங்குமபொட்டு கவுண்டர், பூமகள் ஊர்வலம், உள்ளத்தை அள்ளித்தா என்று பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் ஜானகிராமன், ஆனந்தம், சுதந்திரம், உனக்காக எல்லாம் உனக்காக, மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், சுந்தர புருஷன் என பல வெற்றி படங்களிலும் நடித்திருக்கிறார்.

2011ம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடித்த இவர், பின் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதன்பிறகு பல டிவி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார்.

இவர் பல ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். முழுவதுமாக குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் பிசினஸில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில்கூட நடிகை ரம்பா அவர் குடும்பத்துடன் நடிகர் விஜயை சந்தித்து பேசியிருக்கிறார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வந்தன.

இந்தநிலையில் இப்போது படங்களில் அவர் நடிக்காதது குறித்து பேசியுள்ளார். அதாவது, “அந்தக் காலத்தில் சினிமாவில் நடித்தது மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இப்போது இருக்கக்கூடிய கதைகளில் நடித்தால், எனது பிள்ளைகள் கூட விரும்பி பார்க்கமாட்டார்கள். முன்பு இருந்தது போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இப்போது கதைகள் இல்லை. ஹீரோவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களே உள்ளன. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு எந்த விதமான படங்களும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு இல்லை.” என்று பேசினார்.

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

SCROLL FOR NEXT