Bloody Beggar படத்தின் ப்ரோமோஷனில் கவின் ஸ்டார் படம் குறித்து பேசுகையில் நான் எண்ணியதையேதான் ரசிகர்களும் கூறினர் என்று பேசியிருக்கிறார். இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
கவின் தொடர்ந்து பல படங்களில் கம்மிட்டாகி வருகிறார். சின்னத்திரை நடிகராக அறிமுகமான இவர், பின்னர் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார். முதலில் இவருடைய இரண்டு மூன்று படங்கள் வந்ததும், போனதும் தெரியாமல் இருந்தன. அப்போது டாடா படமே இவரை பெரிய அளவில் தூக்கிவிட்டது. சாதாரண ரசிகர்கள் முதல், சினிமா ரசிகர்கள் வரை அனைவரையும் இப்படம் கவர்ந்தது. பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் கூட தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பின்னர் இவரின் படங்களுக்கும் எதிர்பார்ப்புகள் கூடின.
அந்தவகையில் ஸ்டார் படம் விமர்சன ரீதியாக சற்று அடிவாங்கியது. ஆகையால், தொடக்கத்தில் இருந்த வசூல், போகப்போக குறைந்தது.
அடுத்து நடன இயக்குனரான சதீஷ் இயக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார், கவின். இதனையடுத்து சிவபாலன் இயக்கத்தில் கவின் Bloody Beggar என்ற படத்தில் நடித்திருந்தார். நயன்தாராவுடன் ஒரு படத்தில் கம்மிட்டாகியுள்ளார்.
அந்தவகையில் கவின் நடித்த Bloody Beggar படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதனையடுத்து படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒரு ப்ரோமோஷனில் நடிகர் கவின் ஸ்டார் படம் குறித்து பேசியுள்ளார்.
“ஸ்டார் படத்தின் அனைத்து சீன்களும் நன்றாக இருந்தது என்றாலும், அந்த சீன்களால் படம் கதையைவிட்டு வெளியே போவதுபோல் இருக்கிறது என்று சொல்லி சிலவற்றை நீக்க சொன்னேன். படத்தின் கதை கேட்கும்போது எனக்குப் பிடித்ததால்தான் நடித்தேன். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் 20 நிமிட காட்சிகளை நீக்கச் சொன்னேன். ஆனால், படக்குழுவிற்கு அதிக நம்பிக்கை இருந்தது.” என்று பேசினார்.
இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஏனெனில், ஸ்டார் படத்தைப் பொருத்தவரை ரசிகர்களின் பெரிய வருத்தமே, படத்தின் கதை திசைத் திரும்பி வேறு பாதையில் போகிறது என்பதுதான். அது மட்டும் சரி செய்திருந்தால் படம் சூப்பர் டூப்பர் என்று வெளியாகும்போதே விமர்சனம் செய்திருந்தார்கள். அந்தவகையில் கவினின் எண்ணமும் அதுவாக இருந்திருக்கிறது. ஆனால், கவின் என்ன செய்யமுடியும்? அவர் படத்தின் நடிகர்தானே… இயக்குநர் அல்லவே…